டெல்லி: இரண்டு நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சையத் அல்நஹ்யான், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அபுதாபி-யின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சையத் அல்நஹ்யான் ஞாயிற்றுக்கிழமை அன்று தலைநகர் டெல்லிக்கு வருகை தந்தார். இன்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நேரில் சென்று வரவேற்றார். இதனை அடுத்து இருவரும் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பது குறித்தும் இரு தலைவர்களும் விரிவான ஆலோசனை நடத்தினர்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் ஆகியோர் ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் நெருங்கிய நண்பருக்கு வரவேற்பு என பதிவிடப்பட்டுள்ளது. இளவரசரோடு ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த அமைச்சர்களும் பல்வேறு தொழில் துறை சார்ந்த பிரதிநிதிகளும் வருகை தந்துள்ளனர்.
செவ்வாய்கிழமை மும்பைக்கு பயணம் செய்ய இருக்கும் அல்நஹ்யான் அங்கே தொழில் கூட்டமைப்பு சம்பந்தப்பட்ட ஒரு கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். இரு நாடுகளையும் சேர்ந்த பல்வேறு துறை சார்ந்த தொழிலதிபர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

2015 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு பயணம் செய்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு அடுத்த கட்டத்திற்கு சென்றது. குறிப்பாக எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் திராம் ஆகியவற்றை பயன்படுத்துவதை ஊக்குவிப்பது தொடர்பாக இரு நாடுகளும் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்திலும், உள்ளூர் நாணயத் தீர்வு அமைப்பிலும் கையெழுத்திட்டுள்ளன. அதுமட்டுமின்றி இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் பிரதமர் மோடியின் பயணத்தை தொடர்ந்து மேலும் அதிகரித்தது.
2022-23 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு 85 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதுமட்டுமின்றி இந்தியாவில் நேரடியாக அந்நிய முதலீடு செய்யக்கூடிய நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் நான்காவது இடத்தில் இருக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 3.5 மில்லியன் இந்தியர்கள் வேலை, படிப்பு, தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக தங்கி இருக்கிறார்கள். ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் ஆதரவோடு தான் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் இணைந்தது.
அதே வேளையில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையிலான பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட ஒத்துழைப்பும் அண்மை ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இரு நாடுகளும் இணைந்து "Dessert Cyclone" என்ற பெயரில் கூட்டு ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications