சந்திரபாபு நாயுடு டிமாண்ட், உடனே ஓகே சொன்ன மோடி.. ஒரேயொரு மீட்டிங், ரூ.60000 கோடி ஜாக்பாட்..!

நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்யும் பட்ஜெட் எப்போதும் போல பிஜேபியின் பட்ஜெட் ஆக இருக்காது, மோடி 3.0 ஆட்சி ஆந்திராவின் சந்திரபாபு நாயடு, பீகார் நிதிஷ்குமார் ஆகியோரின் மாநிலங்களுக்கு ஆதரவாக பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாகலாம் என கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் வகையில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆந்திரப் பிரதேச முதல்வராகப் பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடு-வின் ஆதரவில் தான் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி 3வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அனைவருக்கும் தெரியும், இந்த கூட்டணி காரணமாக சந்திரபாபு நாயுடு முக்கிய அமைச்சர் பதவிகளையும், சபாநாயகர் பதவியைக் கேட்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

சந்திரபாபு நாயுடு டிமாண்ட், உடனே ஓகே சொன்ன மோடி.. ஒரேயொரு மீட்டிங், ரூ.60000 கோடி ஜாக்பாட்..!

ஆனால் இவ்விரண்டையும் விரும்பாத சந்திரபாபு நாயுடு தனது ஆந்திர மாநில வளர்ச்சி மீது குறிவைத்துள்ளார். இதற்காக சமீபத்தில் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு - பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சந்தித்த ஐந்து நாட்களுக்குள், சுமார் ரூ.60,000 கோடி முதலீட்டில் ஆந்திர மாநிலத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் மையத்தை அமைக்க வேண்டும் என்ற சந்திரபாபு நாயுடு-வின் முக்கிய கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆட்சியில் முக்கிய கூட்டாளியாக இருக்கும் சந்திரபாபு நாயுடு-வின் TDP கட்சியின் கோரிக்கை மறுக்க முடியாத நிலையில், கோரிக்கை வைக்கப்பட்ட உடன் மத்திய அரசு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) உயர் அதிகாரிகளைப் புதன்கிழமை சந்தித்து ஆந்திர மாநிலத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மூன்று இடங்கள் ஸ்ரீகாகுளம், மச்சிலிப்பட்டினம் மற்றும் ராமயப்பட்டினம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் முறையான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தற்போது இந்த 3 இடங்கள் மதிப்பீடு செய்து, ஒரு இடத்தை இறுதி தேர்வாக அறிவிக்கும், அதை தொடர்ந்து அடுத்தகட்ட பணிகள் துவங்கும். இந்த செயல்முறைக்குக் குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும் என்பதால் பட்ஜெட்டில் இடம்பெற்றாலும் போகலாம் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

ஸ்ரீகாகுளம், மச்சிலிப்பட்டினம் மற்றும் ராமயப்பட்டினம் ஆகிய மூன்று இடங்களும் மாநிலத்தின் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு என வெவ்வேறு பகுதிகளில் உள்ளது. ஏற்கனவே ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா-கோதாவரி படுகையில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மற்றும் பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் பூரியுடன் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு நடத்திய சந்திப்பின் விளைவாக ஆந்திராவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் மிகப்பெரிய வெற்றியாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+