இந்தியாவில் செமிகண்டக்டர் துறையில் அடுத்தடுத்து முதலீடுகளை ஈர்த்து, மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதிக்கு சர்வதேச அளவில் இந்தியாவை முக்கிய ஹப் ஆக மாற்றும் இலக்கை அடைய பிரதமர் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் முக்கிய பங்கு விகிக்கும் செமிகண்டக்டர் துறையில் இருக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 50 சதவீத நிதியியல் உதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இன்று குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் செமிகண்டக்டர் துறை சார்ந்த Semicon India 2023 கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் இத்துறை சார்ந்த பல நிறுவனங்கள் கலந்துக்கொண்டது. இதில் முக்கியமாக அமெரிக்காவின் பிரபலமான செமிகண்டக்டர் நிறுவனமான AMD, பெங்களூரில் புதிய கேம்பஸ் உருவாக்கி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 400 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீட்டில் டிசைன் சென்டரை துவங்கி 3000 இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் உருவாக்கும் மாபெரும் திட்டத்தை AMD அறிவித்தது.
AMD நிறுவனத்தின் அறிவிப்பு செமிகண்டக்டர் துறைக்கு சாதகமாக அமைந்த நிலையில், செமிகண்டக்டர் துறையில் இருக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 50 சதவீத நிதியியல் உதவி வழங்கும் மோடியின் அறிவிப்பு செமிகண்டக்டர் துறையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் நடந்த Semicon India 2023 கூட்டத்தில் உலக நாடுகள் ஒவ்வொரு தொழில் புரட்சியும் வெவ்வேறு காலகட்டங்களில் மக்களின் ஆசை மற்றும் தேவைகளால் உந்தப்பட்டது என்று மோடி பேசினார். தற்போது உலகின் நான்காவது தொழில் புரட்சி இந்தியாவின் விருப்பத்தால் இயக்கப்படுகிறது என்று தான் நம்புவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 50 சதவீத நிதியியல் உதவி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பெரிய அளவில் உதவும். குறிப்பாக பாக்ஸ்கான்-க்கு பெரிய அளவில் உதவும்.
பாக்ஸ்கான் நிறுவனம் தைவான் நாட்டின் மிகப்பெரிய செமிகண்டக்டர் நிறுவனமாக இருக்கும் TSMS உடனும், ஜப்பான் நாட்டின் TMH குரூப் உடனும் தொழில்நுட்ப உதவிக்காகவும், கூட்டணியை உருவாக்கி இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைக்கவும், இயக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பாக்ஸ்கான் மத்திய அரசிடம் இந்தியாவில் குறைந்தது 4 முதல் 5 செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் உற்பத்தி லைன்களை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் உற்பத்தி தளத்தை அமைக்க தொழில்நுட்ப கூட்டணியை பெற்ற பின்பு உரிய மானியத்துடன் தொழிற்சாலை அமைக்க உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications