பயத்தில் பர்ச்சேஸ் வேண்டாம்.. கோரிக்கை வைத்த பிரதமர் மோடி..! தவறாமல் பின்பற்றுவோமே!

இன்று இரவு சுமார் 8 மணிக்கு பிரதமர் கொரோனா வைரஸ் பற்றிப் பேசி இருக்கிறார். இனி அவர் மொழியில்...

உலகமே ஒரு நெருக்கடியில் தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது. எப்போதும் எந்த சூழலும் சில தேசங்களுக்கு மட்டுமே தான் இருக்கும். ஆனால் இந்த கொரோன பிரச்சனை உலகம் முழுக்க பரவிக் கொண்டு இருக்கிறது எனப் பேசத் தொடங்கினார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

எனக்கு உங்களுடைய நேரம் வேண்டும். இந்த கொரோனா வைரஸ் நம்மை பாதிக்காது என கருதக் கூடாது. ஒரு இந்தியப் பிரஜையாக, மாநில மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவேன் என சத்தியம் செய்ய வேண்டும்.

நாம் நலமாக இருந்தால், நாடும் நலமாக இருக்கும். உலகம் நலமாக இருந்தால் நாமும் நலமாக இருப்போம். வரும் வாரங்களில் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வீட்டில் இருந்த படியே வேலை பார்த்துக் கொள்ளுங்கள் என மக்களுக்கு பல நல்ல அறிவுரைகளைச் சொல்லி இருக்கிறார். அப்படியே பொருளாதாரத்தைப் பற்றியும் பேசி இருக்கிறார்.

புதிய டாஸ்க் ஃபோர்ஸ்

புதிய டாஸ்க் ஃபோர்ஸ்

வரும் மார்ச் 22, ஞாயிற்றுக் கிழமை மக்கள், காலை 7 மணி முதல் மாலை 9 மணி வரை வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என Janta Curfew பற்ரி எல்லாம் பேசி விட்டு, பொருளாதாரத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார். COVID-19 Economic Task Force என ஒன்றை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அமைத்து இருக்கிறார்களாம்.

இந்தியப் பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரம்

ஏற்கனவே இந்தியப் பொருளாதாரம் கடந்த நான்கு காலாண்டுகளாக ஜிடிபி வளர்ச்சி சரிந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த சூழலில் மிகச் சரியாக, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த, நிதி அமைச்சர் தலைமையில், மேலே சொன்ன டாஸ்க் ஃபோர்ஸை கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு. இது பாராட்டுக்குறியது. அதோடு மிக முக்கியமாக 2 கோரிக்கைகளை வைத்து இருக்கிறார் பிரதமர்.

பயத்தில் பர்சேஸ்

பயத்தில் பர்சேஸ்

வரும் நாட்களில், அத்தியவசியப் பொருட்கள் எல்லாம், சாதாரண நாட்களைப் போலக் கிடைக்குமா என்கிற பதட்டத்தில், நிறைய பொருட்களை வாங்கிக் குவிக்காதீர்கள் எனச் சொல்லி இருக்கிறார் பிதமர் மோடி. தோடு சீராக பொருட்கள் கிடைக்க, எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.

கூலி

கூலி

அதோடு நம் வீட்டில் வேலை பார்க்கும் வீட்டு உதவியாளர்கள், ஓட்டுநர்கள், தோட்டக்காரர்கள் போன்ற கூலித் தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுக்காமல் இருக்காதீர்கள் எனவும் பலே கோரிக்கை வைத்து இருக்கிறார். மிக குறிப்பாக வதந்திகளை நம்பாதீர்கள் எனச் சொல்லி இருக்கிறார். இந்த் ஐரண்டு கோரிக்கைகளுமே உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டியது தான்.

அரசு கடனை

அரசு கடனை

அதே போல இந்திய அரசும் தன்னால் முடிந்த வரை எல்லா மக்களுக்கும் சீராக பொருட்கள் கிடைப்பதையும், அவர்களுக்கான வருமானம் மற்றும் சம்பளம் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அதை மத்திய அரசு செய்யும் என நம்புவோம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+