பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும் போது காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர் ராகுல் காந்தியையும் கடுமையாக குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடி பேசுகையில் ராகுல் காந்தி, "ஐந்து தொழிலதிபர்களை" குறிவைத்துப் பேசி வந்ததில் இருந்து தற்போது "அம்பானி மற்றும் அதானி" மீது கவனம் செலுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.

பல ஆண்டுகளாக காங்கிரஸார் 'ஐந்து தொழிலதிபர்கள்' பற்றி பேசுவார், ஆனால் இப்போது, அவர்கள் "அம்பானி மற்றும் அதானியை" மட்டுமே விமர்சனம் செய்து வருகின்றனர்.
"தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து, ராகுல்-ம் மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்களும் அம்பானி, அதானியை விமர்சனம் செய்வதை கூட நிறுத்திவிட்டார்கள். ஏன்? காங்கிரஸாரிடம் நான் கேட்க விரும்புவது இது மட்டும் தான்: அதானி, அம்பானியிடம் எவ்வளவு கருப்பு பணம் பெற்றிருக்கிறார்கள்? நடந்து வரும் தேர்தலுக்கு அவர்களிடமிருந்து எவ்வளவு நிதி காங்கிரஸ் பெற்றது? என்று பேசினார் நரேந்திர மோடி.
மோடியின் இந்த கேள்விக்கு காங்கிரஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டதன் மூலம் இப்பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்துள்ளது.
மோடியின் அதானி-அம்பானி தொடர்பான கருத்துக்கு காங்கிரஸ் பதில் கொடுக்கும் விதமாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, பதலடி கொடுத்தார். உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரியங்கா காந்தி வதேரா பேசுகையில், "இன்று பிரதமர் நரேந்திர மோடி "அதானி-அம்பானி பெயர்களை ராகுல் ஜி எடுக்கவில்லை" என்கிறார். ஆனால் ராகுல் தொடர்ந்து அதானி-அம்பானி குறித்து பேசி வருகிறார்.
ஆனால் பாஜக தனது நண்பர்களின் அதாவது அதானி-அம்பானி உட்பட பல்வேறு கார்ப்ரேட் நண்பர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார்கள், ஆனால் உத்தர பிரதேசத்தில் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை என கூறினார்.


Click it and Unblock the Notifications