குஜராத்தின் சூரத்தை சேர்ந்த வைர வியாபாரியான சாவ்ஜி தோலாக்கியாவின் மகன் திரவ்ய தோலாகியாவின் திருமணத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். திரவ்ய தோலாகியாவின் மற்றும் ஜான்வி ஆகியோரின் திருமணம் அக்டோபர் 28-ஆம் தேதி அன்று நடைபெற்றது. சூரத்தின் பெரும் பணக்காரர் நடத்திய திருமண விழாவில் கலந்துகொள்ள நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் வந்தார். குஜராத்தின் துதாலாவில் உள்ள ஹெட் நி ஹவேலியில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.
குடும்பத்தினர் பகிர்ந்துள்ள புகைப்படங்களில், பிரதமர் மோடி புதுமணத் தம்பதிகளுக்கு ஆசி வழங்குவதைக் காணலாம். தோலாகியாவின் ஒரே மகனான திரவ்யா, ரியல் எஸ்டேட் தொழிலதிபரான பாரத் சாலுடியாவின் மகள் ஜான்வியை மணந்துள்ளார். ஹரி கிருஷ்ணா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான சாவ்ஜி தோலாகியா, டெல்லியில் பிரதமரை சந்தித்தபோது தன் மகனின் திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட பதிவில், சாவ்ஜி தோலாக்கியா, "இன்று, திரவ்யா மற்றும் ஜான்வி சேர்ந்து புதிய பயணத்தைத் தொடங்கும் இந்த சந்தோஷமான தருணத்தில், மதிப்புமிகு பிரதமர் நரேந்திர மோடிஜி எங்களுடன் இணைந்திருப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவரது வருகை மற்றும் தம்பதியருக்கு அவர் அளித்த இதயப்பூர்வமான ஆசிர்வாதங்கள் எங்கள் குடும்பத்தை நன்றியுணர்வு மற்றும் பெருமையால் நிரப்பியுள்ளன" என்று ஒரு பதிவில் போஸ்ட் செய்திருந்தார்.
"7 வருட கடின உழைப்புக்குப் பிறகு, இன்று இந்த திருமணம் தாமதமின்றி நடந்தது. டெல்லியில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியை நாங்கள் சந்தித்தபோது, துதாலா கிராமத்தில் பாரத்மாதா சரோவர் திறப்பு விழாவிற்கு அவரை அழைத்தோம். அவரை இரண்டு முறை அழைத்தோம். ஒன்று சரோவர் திறப்பு விழாவிற்கும் மற்றொன்று திருமணத்திற்கு" என்று மற்றொரு பதிவில் போஸ்ட் செய்திருந்தார்.
ஆடம்பர கார்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகை உட்பட ஊழியர்களுக்கு ஆடம்பரமான பரிசுகளை வழங்கிய வைர வியாபாரியாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டவர் சவ்ஜி தோலாகியா. 2017-ஆம் ஆண்டு, தீபாவளியன்று தனது ஊழியர்களுக்கு 1,200 யூனிட் டட்சன் கார்களை பரிசாக வழங்கினார் தோலாக்கியா. மேலும் 2016-ஆம் ஆண்டில், அவர் தனது ஊழியர்களுக்கு 51 கோடி ரூபாய் மதிப்பிலான தீபாவளி போனஸ் மற்றும் 400 பிளாட்களுடன் 1,260 கார்களை பரிசாக வழங்கினார்.
தோலாகியாவின் மகன் திரவ்யா மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பாரத் சலூதியாவின் மகள் ஜான்வி ஆகியோரின் திருமணத்தில், பிரதமர் மோடி தம்பதிகளை வாழ்த்தி, தம்பதிகளுடன் அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. மணமகனும், மணமகளும் அவருடைய பாதங்களைத் தொட்டு ஆசிர்வாதம் பெறுவதும் அந்த வீடியோவில் தெரிகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications