பல அரசியல் பிரபலங்களும் தங்களுக்கென்று அதிகாரப்பூர்வ சோசியல் மீடியா கணக்குகளை வைத்திருக்கின்றனர். அதில் அவர்களுக்கு எக்கச்சக்க பாலோவர்களும் இருக்கின்றனர். இந்நிலையில் 100 மில்லியன் பாலோவர்களைக் கடந்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் அதிகம் பின் தொடரப்படும் முதல் தலைவராக புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். மேலும் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் 30 மில்லியன் பாலோவர்கள் அவருக்கு அதிகரித்துள்ளது.
இந்திய அரசியல்வாதிகள் பலர் சமூக ஊடக தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பாலோவர்கள் 30 மில்லியனை எட்டியுள்ளது. இவரே உலக அளவில் தலைவராக இருக்கும் நபர்களில் அதிக பாலோவர்களை பெற்றுள்ளார்.

இவரைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு 26.4 மில்லியன் பாலோவர்கள், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 27.5 மில்லியன் பாலோவர்கள், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ்-விற்கு 19.9 மில்லியன் பாலோவர்கள், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 7.4 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர்.
மேலும் மற்ற அரசியல்வாதிகளில் லாலு பிரசாத் யாதவ் 6.3 மில்லியன் பாலோவர்களையும், தேஜஸ்வி யாதவ் 5.2 மில்லியன் பாலோவர்களையும், என்சிபி தலைவர் சரத் பவார் 2.9 மில்லியன் பாலோவர்களையும் பெற்றுள்ளனர்.
உலக அளவில் பிற தலைவர்களோடு ஒப்பிடும்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிக அளவில் பாலோவர்கள் இருக்கின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 38.1 மில்லியன் பாலோவர்கள், துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது 11.2 மில்லியன் பாலோவர்கள் மற்றும் 18.5 மில்லியனுடன் போப் பிரான்சிஸ் போன்ற பிற தலைவர்களையும் பிரதமர் மோடி முந்தியுள்ளார்.
பிரதமர் மோடி முக்கிய விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்களை விடவும் அதிகமான பாலோவர்களை வைத்திருக்கிறார். விராட் கோலி 64.1 மில்லியன், பிரேசிலிய கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் 63.6 மில்லியன், மற்றும் அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் 52.9 மில்லியன் பாலோவர்களை வைத்திருக்கின்றனர்
டெய்லர் ஸ்விஃப்ட் 95.3 மில்லியன், லேடி காகா 83.1 மில்லியன், மற்றும் கிம் கர்தாஷியன் 75.2 மில்லியன் பாலோவர்களை பெற்றுள்ளனர். இந்தப் பிரபலங்களையும் அவர் முந்தியுள்ளார்.
X-ஐத் தாண்டி யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களையும் நரேந்திர மோடி பயன்படுத்துகிறார். அங்கு அவருக்கு கிட்டத்தட்ட 25 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் மற்றும் 91 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர்.
மேலும் இவ்வளவு அதிகமான பாலோவர்களை பெறுவதற்கு மோடி எந்தவிதமான பெய்டு பிரமோஷன்களையும் பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இவர் தனது அதிகாரப்பூர்வ அக்கவுண்டுகளில் இருந்து சாமானிய மக்களையும் பின் தொடர்கிறார். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் கூட சில நேரங்களில் பதிலளிக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications