வளைகுடா நாடுகளில் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் பொருளாதார மற்றும் அத்தியாவசிய தேவைகள் மீது அதன் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு அமைச்சரவை குழு (Cabinet Committee on Security - CCS) அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில், உலகளாவிய நிலைமை குறித்து அமைச்சரவை செயலாளர் விரிவான விளக்கத்தை வழங்கினார். இதை தொடர்ந்து மேற்கு ஆசிய மோதல் காரணமாக உலக பொருளாதாரத்தில் குறுகிய காலம், நடுத்தர காலம் மற்றும் நீண்ட காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பாதிப்புகள் இந்தியாவின் பல்வேறு துறைகளில், குறிப்பாக விவசாயம், உரங்கள், உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி, மின்சாரம், MSME, வர்த்தகம், கப்பல் போக்குவரத்து மற்றும் சப்ளை செயின்-களில் எப்படி எதிரொலிக்கும் என்பதையும் மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
இந்த கூட்டத்தில் உணவு, எரிபொருள், மின்சாரம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு முழுமையாக கிடைப்பை உறுதி செய்யவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது. குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் இந்த பொருட்கள் தடையின்றி கிடைக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்தும் விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன.
விவசாய துறை
கரீஃப் பருவம் நெருங்கி வரும் நிலையில், விவசாயிகள் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் குறித்து கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகும் நிலையில் நடவு காலத்திற்கு தேவையான உரங்களின் கிடைப்பதை உறுதி செய்ய ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம், எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு மாற்று உரவளங்களை கண்டறியும் முயற்சிகளும் ஆராயப்பட்டு வருகின்றன.
மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை
இந்தியாவின் அனைத்து மின் நிலையங்களில் உள்ள நிலக்கரி கையிருப்பு போதுமானதாக இருப்பதால் மின்சார தட்டுப்பாடு ஏற்படாது என்று அரசு உறுதி அளித்துள்ளது. இது, தொழில்துறை மற்றும் வீட்டு பயன்பாட்டிற்கான மின்சார விநியோகத்தில் எந்த தடையும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி
ரசாயனங்கள், மருந்துகள் மற்றும் பெட்ரோகெமிக்கல்கள் போன்ற துறைகளில் இறக்குமதி சார்பை குறைக்க, விளைகுடா நாடுகளை தொடர்ந்து நம்பியிருக்காமல் மற்ற நாடுகளை கண்டறியும் திட்டங்களும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
அதே நேரத்தில், இந்திய தயாரிப்புகளை வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை மற்ற நாடுகளும், புதிய சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த சவால்களை சமாளிக்க, அனைத்து அமைச்சகங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். இதற்காக, அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் அடங்கிய ஒரு சிறப்பு குழுவை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டார். துறை சார்ந்த குழுக்கள் உருவாக்கப்பட்டு, அனைத்து தரப்பினருடன் இணைந்து ஆலோசனை நடத்தப்பட அரசு முடிவு செய்துள்ளது.
கருப்புச் சந்தை
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் கருப்புச் சந்தை போன்ற பிரச்சினைகளை தவிர்க்க, மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றவகு அவசியம் என பிரதமர் இக்கூட்டத்தில் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு மோதல் இந்திய பொருளாதாரத்துக்கு பல்வேறு தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கிய சூழ்நிலையாக உருவெடுத்துள்ளது. இதனை முன்னிட்டு, மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, அத்தியாவசிய தேவைகள் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்ய முயற்சி செய்து வருகிறது. பொதுமக்கள் வாழ்க்கையில் குறைந்த பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் வகையில் முழுமையான திட்டமிடல் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் கொடுத்த ஒற்றை அப்டேட்.. தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை! இதுலேயே தெரிஞ்சுக்கோங்க?

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஈரான் போர் நிறுத்தம்: கச்சா எண்ணெய், LPG, LNG வாங்குவதில் போட்டி! கத்தாருக்கு பறந்த மத்திய அமைச்சர்!

ஈரான் போட்ட முட்டுக்கட்டை! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி..ஜேடி வேன்ஸ் சொன்ன அந்த பேட் நியூஸ்!



Click it and Unblock the Notifications