இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவைகளை விரிவாக்கம் செய்வதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஏற்கனவே தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது வந்தே பாரத் ரயில்களில் படுக்கை வசதியுடன் கூடிய ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன.
நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப புது புது ரயில்களை மத்திய அரசு அறிமுகம் செய்த வண்ணம் இருக்கிறது. இதில் மிக முக்கியமானது வந்தே பாரத் ரயில்கள். பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முக்கிய திட்டமாக இது பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை அரசு விரிவாக்கம் செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி படுக்கை வசதியுடன் கூடிய நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை இன்று தொடங்கி வைத்தார். கொல்கத்தாவின் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து அசாமின் கௌஹாத்திக்கு முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இதனை கொடியசைத்து தொடங்கி வைத்து பயணமும் மேற்கொண்டார். அப்போது ரயிலில் பயணம் செய்த மாணவர்களோடு பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
விமான சேவைக்கு நிகராக வந்தே பாரத் ரயிலில் வசதிகள் இருப்பதாக மத்திய ரயில்வே துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. நீண்ட தூரம் இருக்கக்கூடிய நகரங்களுக்கான பயண நேரத்தை குறைத்து இருப்பது, அதிவேகமான மட்டும் இல்லாமல் பாதுகாப்பான பயணத்தையும் வந்தே பாரத் ரயில்கள் வழங்குகின்றன. இதில் தற்போது படுக்கை வசதியும் கொண்டுவரப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது.
தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தான் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது இந்த சூழலில் தான் மத்திய அரசு படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்திருக்கிறது. அடுத்தடுத்து இது பல்வேறு நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.
முதல் ரயில் 968 கிலோமீட்டர் தொலைவிற்கு இயக்கப்படுகிறது. இதில் பயண கட்டணம் என்பது உணவோடு சேர்த்து ஏசி மூன்றாம் வகுப்புக்கு 2300 வரையிலும் ஏசி 2-ம் வகுப்புக்கு 3000 ரூபாய் வரையிலும் ஏசி முதல் வகுப்புக்கு 3,600 ரூபாய் வரையிலும் டிக்கெட் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இன்று அறிமுகம் செய்யப்பட்ட முதல் வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயிலில் பதினாறு பெட்டிகள் உள்ளன. இதில் மொத்தம் 823 பயணிகள் பயணம் செய்யலாம். இது அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்.
இந்த ஆண்டு முடிவதற்குள் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிக்கப்பட்டு பல்வேறு நகரங்களிலும் இயக்கப்படும் என மத்திய ரயில்வே தகவல் தெரிவிக்கிறது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் குறைந்தபட்சம் 400 கிலோமீட்டர் வரையிலான ஏசி முதல் வகுப்பின் டிக்கெட்டுக்கு 1,520 ரூபாய், ஏசி இரண்டாம் வகுப்புக்கு 1240 ரூபாய், ஏசி மூன்றாம் வகுப்புக்கு 960 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் குறைந்தபட்ச கட்டணம் 960 ரூபாயாக இருக்கும்.பயணம் செய்ய உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரயில் அனுமதிக்கப்படுவார்கள். காத்திருப்பு பட்டியல் மற்றும் ஆர்ஏசி டிக்கெட்டுகள் இந்த ரயிலில் வழங்கப்படாது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications