பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை விமானத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு கிளம்பினார். பிரான்ஸ் நாட்டின் பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் கெளரவ விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்று, அதிபர் இம்மானுவேல் மக்ரான் மற்றும் பிற தலைவர்களை சந்திக்க உள்ளார்.
ஜூலை 13 ஆம் தேதி காலையில் கிளம்பிய மோடி மாலை 4 மணியளவில் பாரிஸ்-க்கு சென்றடைய உள்ளார், அதைத் தொடர்ந்து அவர் பிரான்ஸ் செனட்டின் தலைவர் மற்றும் பிரதமர் எலிசபெத் போர்ன்-ஐ சந்திக்க உள்ளார். இதற்கு மத்தியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அளிக்கும் சிறப்பு விருந்தில் கலந்துக்கொள்ள உள்ளார். இதோடு பிரான்ஸ் - இந்திய நிறுவனங்களின் சீஇஓ உடனான சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா பிரதமர் மோடியின் பாரிஸ் பயணம் குறித்து பேசுகையில் மோடியின் இந்த பயணத்தில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகப்படியான கவனம் பெறும் என்று கூறினார்.
இந்த ஆண்டு இந்தியா - பிரான்ஸ் நாட்டின் கூட்டாண்மையின் 25வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இந்தியா - பிரான்ஸ் மிகுந்த நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பில் இரு நாடுகளும் பாதுகாப்பு, விண்வெளி, சிவில் நியூக்ளியர், ப்ளூ எக்னாமி, வர்த்தகம், முதலீடு, கல்வி, கலாச்சாரம் மற்றும் மக்களுடனான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு களங்களில் நெருக்கமாக இயங்கி வருகிறது. இரு நாடுகளும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளிலும் இணைந்து செயல்படுகிறது என பிரதமர் மோடி இன்று காலை தனது பிரான்ஸ் பயணத்தின் போது தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்தில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது இரு நாடுகளும் சுமார் 90000 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய ஒப்பந்தகள் செயல்படுத்தப்பட உள்ளதை தான். அதிலும் மிக முக்கியமாக பிரான்ஸ் நாட்டிடம் இருந்த இந்தியா 26 ரபேல் போர் விமானங்கள், 3 கூடுதல் ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்க உள்ளதாக தெரிகிறது. இந்த ரபேல் விமானங்கள் INS Vikrant போர் விமானங்களை தாங்கும் போர் கப்பலில் பயன்படுத்தும் திறன் கொண்டவை.
இந்தியா வாங்கும் 26 ரபேல் விமானங்களில் 22 ஒற்றை இருக்கைகள் கொண்ட போர் விமானங்களும், நான்கு இரு இருக்கைகள் கொண்ட போர் விமானங்களும் அடங்கும். இது இந்திய விமான படையை பல மடங்கு வலிமையாக்கும் என்றால் மிகையில்லை.

மேலும் இந்திய கடற்படைக்கு டீசல் - மின்சார நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ப்ராஜெக்ட் 75 இன் கீழ் மூன்று கூடுதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏற்கனவே செய்யப்பட்ட ஸ்கார்பீன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமைய உள்ளது என தெரிகிறது. இந்த 3 நீர்மூழ்கிக் கப்பல்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் ஜூலை 13 ஆம் தேதி மாலை பாரிஸ்-க்கு சென்று ஜூலை 14 தேதி பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் கெளரவ விருந்தினராக பிரதமர் மோடி கலந்துக்கொண்டு, ஜூலை 15ஆம் தேதி அபுதாபி செல்கிறார் மோடி.
More From GoodReturns

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

தொடர்ந்து 2ஆவது நாளாக விலை சரிந்த தங்கம்..!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன?

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications