பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரத்தை பரிசாக வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் பெற்ற பரிசு பொருட்களின் விவரங்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. அதில் 2023 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட மிக விலை உயர்ந்த பரிசு பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய பரிசு தான் என தெரிய வந்துள்ளது .

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவியான ஜில் வைடனுக்கு நரேந்திர மோடி 17 லட்சம் ரூபாய் (20,000 டாலர்) மதிப்புள்ள 7.5 கேரட் வைரத்தை பரிசாக வழங்கியிருக்கிறார். ஜில் பைடன் பெற்ற பரிசுகளிலேயே இதுதான் விலை உயர்ந்தது என தற்போது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து உக்ரைன் தூதர் 14,000 டாலர் மதிப்பு கொண்ட புரூச் எனப்படும் நகையை ஜில் பைடனுக்கு பரிசாக வழங்கியுள்ளார். அடுத்தது எகிப்து நாட்டு அதிபரும் அவரது மனைவியும் இணைந்து ஜில் பைடனுக்கு 4,510 டாலர் மதிப்புள்ள கைச்செயின் , புரூச் மற்றும் புகைப்பட ஆல்பம் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கியுள்ளனர்.
அதே போல ஜோ பைடனும் பல விலை உயர்ந்த பரிசுகளை பெற்று இருக்கிறார். தென்கொரியாவின் அதிபராக இருந்த சுக் யோல் யூன் 7100 டாலர் மதிப்பு மிக்க புகைப்பட ஆல்பத்தை இவருக்கு பரிசாக வழங்கியுள்ளார். இதுவே ஜோ பைடன் பெற்ற விலை உயர்ந்த பரிசாக பார்க்கப்படுகிறது. அடுத்ததாக மங்கோலிய பிரதமர் 3,495 டாலர் மதிப்புள்ள ஒரு போர் வீரர் சிலையை அளித்துள்ளார், புரூனே நாட்டு மன்னர் 3,300 டாலர் மதிப்புள்ள வெள்ளி கிண்ணம் ஒன்றை ஜோ பைடனுக்கு பரிசாக வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் பைடனுக்கு வெள்ளி விநாயகர் சிலை, விளக்கு ஆகியவற்றை பரிசாக வழங்கினார். அவரது மனைவி ஜில் பைடனுக்கு வைரத்தை நினைவு பரிசாக வழங்கினார்.
பிரதமர் மோடி ஜில் பைடனுக்கு வழங்கிய வைரமானது இந்தியாவில் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரமாகும். இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது என சொல்லப்படுகிறது. இந்தியாவின் 75 ஆவது சுதந்திர ஆண்டை நினைவூட்டும் வகையில் 7.5 கேரட் மதிப்புள்ள இந்த வைரம் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அரசு சட்டப்படி அதிபர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் வெளிநாட்டு தலைவர்களிடமிருந்து பரிசு பொருட்களைப் பெறும்போது அவற்றின் மதிப்பு 480 டாலருக்கும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த பரிசு பொருட்கள் குறித்த பட்டியலை பொதுவெளியில் வெளியிட வேண்டும். அந்த வகையில் தான் தற்போது அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் பெற்ற பரிசு பொருட்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
இந்த பரிசு பொருட்களை இவர்கள் அதிபராக இருக்கும் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும். பதவி விட்டு செல்லும்போது அரசிடம் இவற்றை ஒப்படைத்து விட வேண்டும். ஒருவேளை குறிப்பிட்ட அந்த பரிசு அவர்களுக்கு வேண்டுமென்றால் சந்தை விலை கொடுத்து அந்த பரிசினை அவர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்கிறது அமெரிக்கா சட்டம்.
முன்னதாக அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி வகித்த 2017 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இடம் இருந்து அவருக்கு 50,000 டாலர்கள் மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.
Story Written By: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications