பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 20 ஆம் தேதி (இன்று) அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாகப் பணியமர்த்தப்படும் 71, 000 பேருக்குப் பணி நியமனக் கடிதங்களை அளித்தார்.
பிரதமர் அலுவலகம் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அரசு வேலையைப் பெற்ற நாட்டின் பல பகுதி மக்களிடம் மோடி இன்று வீடியோ கான்பிரன்ஸ் முறையில் பேசினார்.
பட்ஜெட்-க்கு முன்பு இத்தகைய அறிவிப்பு மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கை உருவாக்கும் எனத் தோன்றினாலும், மத்திய அரசு பல ஆண்டுகளாகத் தனது வேலைவாய்ப்பு இலக்கை தவறவிட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒரே நாளில் 71,000 பேருக்கு அரசு வேலைக்கான நியமனக் கடிதங்கள் அளிக்கப்பட்டு உள்ளது மகிழ்ச்சியான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரே நாளில் சுமார் 71,000 பேர் அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்கள், அமைப்புகளில் புதிதாகப் பணியமர்த்தப்படத் தேர்வானவர்களுக்குப் பணி நியமனக் கடிதங்களை அளித்தார். ரோஸ்கர் மேளாவின் கீழ் இன்று காலை 10.30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் மோடி பணி நியமனக் கடிதங்களை அளித்தார்.
புதிய பணியாளர்கள்
நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பணியாளர்கள் இந்திய அரசின் கீழ் ஜூனியர் இன்ஜினியர்கள், லோகோ பைலட்கள், டெக்னீஷியன்கள், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள், ஸ்டெனோகிராபர், ஜூனியர் அக்கவுண்டன்ட், கிராமீன் டக் சேவக், வருமான வரி ஆய்வாளர், ஆசிரியர், செவிலியர், மருத்துவர், சமூகப் பாதுகாப்பு அதிகாரி, PA, MTS, மற்றும் இதர பல்வேறு பதவிகளில் சேர உள்ளார்கள்.
ரோஸ்கர் மேளா
ரோஸ்கர் மேளா என்பது இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு முக்கியத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களுக்கு வேகமாக ஆட்களை நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
10 லட்சம் பேர் இலக்கு
10 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தவும், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் பிரதமர் மோடி 'ரோஸ்கர் மேளா' என்ற திட்டத்தைத் தொடங்கினார். 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இரண்டாவது ரோஜ்கர் மேளாவில், புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு 71,000 நியமனக் கடிதங்களைப் பிரதமர் மோடி வழங்கினார். முதல் ரோஸ்கர் மேளாவில் அவர் 75,000 நியமனக் கடிதங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்புகள், நிறுவனங்களில் காலியாக இருக்கும் பணியிடங்கள் மூலம் தத்தம் துறையின் பணி இயக்கம் மெதுவாக நடப்பது மட்டும் அல்லாமல் இப்பிரிவின் செயல் திறன் பெரிய அளவில் பாதிக்கிறது, இதனால் அரசுக்கு தான் இழப்பு.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications