பிரதமர் நரேந்திர மோடி முதல் முறை பிரதமராக பதவியேற்ற போது, நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் கவலைப்படும் விதத்தில் இருந்தது. பொருளாதார வளர்ச்சி குறைவாக இருந்தது, முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைவாக இருந்தது, ஒரு டஜன் இந்திய மெகா கோடீஸ்வரர்கள் திவாலாகி இருந்தன, வங்கிகள் திரும்பி வராத கடனால் திணறி கொண்டு இருந்தன.
பத்து ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இந்தியாவின் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெரிய நாடுகளின் வளர்ச்சியை காட்டிலும் அதிகமாக உள்ளது. குறிப்பாக பொருளாதார பலத்தில், கடந்த ஆண்டு இந்தியா இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 5வது இடத்துக்கு முன்னேறியது. 2027ம் ஆண்டுக்குள் ஜப்பான் மற்றும் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி 3வது இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாட்டின் வங்கிகள் தற்போது மிகவும் வலுவாக உள்ளன.

இந்தியா ஜி20 உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது, நிலவின் தென்துருவத்துக்கு பயணம் செய்த முதல் நாடு, சில டஜன் யூனிகார்ன் நிறுவனங்கள் உருவாகியுள்ளது, பங்குச் சந்தைகளின் எழுச்சி நடுத்தர வர்த்தகத்தின் பொருளாதாரத்திலும் ஒரு சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
மோடியின் டிஜிட்டல் நிர்வாகத்தின் உந்துதல் நாட்டின் ஏழ்மையான மக்கள் சிலரின் வாழ்க்கையை மாற்ற தொடங்கியுள்ளது. இப்போது நாட்டின் கடை கோடியில் உள்ள இந்தியர்களும் தங்கள் மொபைலை பயன்படுத்தி ரொக்கம் இல்லாமல் பொருள் வாங்க முடியும். 2021 மார்ச் வரை, டிஜிட்டல் நிர்வாகம் காரணமாக அரசுக்கு கணிசமான பணம் சேமிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் மோடி அரசு உள்கட்டமைப்பு செலவினங்களில் 10,000 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. இதனால் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பட்டுள்ளது. உதாரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 54,000 கி.மீ தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன. இது முந்தைய பத்தாண்டுகளின் நீளத்தை காட்டிலும் 2 மடங்கு அதிகம். பல தசாப்தங்களாக இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் தடையாக இருந்து வரும் அதிகாரத்துவத்தையும் மோடி அரசாங்கம் கணிசமாக தளர்த்தியுள்ளது.
அதேசமயம், மோடியின் கொள்கைகள் அனைவருக்கும் பலன் அளிக்கவில்லை. கோவிட்டின் போது விதிக்கப்பட்ட லாக்டவுன், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவுகள், ஜிஎஸ்டியை அவசரகதியில் அமல்படுத்தியது போன்றவை இந்தியாவின் பொருளாதாரத்தில் நீண்டகால கட்டமைப்பு விளைவுகளை ஏற்படுத்தின. மோடி அரசின் இந்த நடவடிக்கை சிலவற்றின் தாக்கத்தால் இன்னும் சிறு நிறுவனங்கள் தள்ளாடுகின்றன.
வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது மோடியால் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையாக உள்ளது. 2000ல் வேலையற்ற மக்களில் படித்த இளைஞர்களின் பங்கு 54.2 சதவீதமாக இருந்தது. இது 2022ல் 65.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2014ல் ஆட்சிக்கு வந்த உடனேயே பிரதமர் மோடி, இந்தியாவை உலகின் தொழிற்சாலையாக மாற்றுவதற்கான லட்சியமான மேக் இன் இந்தியா திட்டத்தை அறிவித்தார்.
மத்திய அரசின் இவ்வளவு முயற்சிகள் இருந்தபோதிலும், கடந்த பத்தாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தி துறையின் பங்கு தேக்கநிலையில்தான் உள்ளது. 2050ம் ஆண்டு வரை இந்தியாவின் மேனுபாக்சரிங் துறை ஆண்டுக்கு 8 சதவீதம் வளர்ச்சி கண்டாலும், 2022ல் இருந்த சீனாவின் உற்பத்தி அளவுக்கு கூட இந்தியாவின் உற்பத்தி இருக்காது. பெரிய அளவிலான தொழில் இல்லாததால் இந்தியாவின் பாதி மக்கள் இன்னும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தை நம்பியுள்ளனர்.
மக்கள் பொருட்களை வாங்குவதற்கு செலவிடும் பணமான ஒட்டு மொத்த தனியார் நுகர்வு செலவினத்தில் 3 சதவீதம் வளர்ச்சி என்பது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மெதுவானது. நிதி சேமிப்பு மிகக் குறைந்த மட்டத்திற்கு சென்றுள்ளது. அதேசமயம் வீட்டுக் கடன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கோவிட்-19க்கு பிறகு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் தன்மை சீராக இல்லை. பணக்காரர்கள் செழித்து வளர்ந்துள்ளனர், ஏழைகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஒட்டு மொத்தத்தில் உலகின் 5வது பொருளாதாரமாக இந்தியா இருந்தாலும் தனிநபர் அடிப்படையில் 140வது இடத்தில்தான் உள்ளது. பொருளாதார சமத்துவமின்மை 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விரிவடைந்துள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது, கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக அரசாங்கத்தின் இந்தியாவிற்கான பொருளாதாரக் கண்ணோட்டம் செயல்படுவது போல் தெரிகிறது. ஆனால், ஆழமாக பார்த்தால், நாட்டின் 140 கோடி மக்களில் பெரும் பகுதியினருக்கு இன்னும் ஏற்றம் தரும் காலமாக அமையவில்லை.
Story written by: Subramanian
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications