ஏமாற்றம்..! ஆந்திராவுக்கு 2, தமிழ்நாட்டுக்கு 0.. ரூ.28,500 கோடி தொழில்துறை ஸ்மார்ட் நகரத் திட்டம்..!!

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் உற்பத்தியை அதிகரிக்க 12 புதிய தொழில்துறை ஸ்மார்ட் நகரங்களை வெவ்வேறு மாநிலங்களில் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இன்றைய அமைச்சரவையின் முடிவுகள் குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

மத்திய அரசு அமைக்கும் 12 Industrial Smart City-களில் இரண்டு ஆந்திரப் பிரதேசத்திலும் ஒன்று பீகாரிலும் அமைக்கப்படுகிறது. இவ்விரண்டும் குறிப்பிட முக்கியமான காரணம் மத்தியில் 3வது முறையாக அட்சி அமைத்துள்ள மோடி தலைமையிலான அரசு ஆந்திரா டிடிபி கட்சி ஒன்று பீகாரின் ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக பட்ஜெட் அறிவிப்பிலிருந்து பல திட்டங்கள் இவ்விரு மாநிலங்களுக்குச் சாதகமாக அமைந்து வருகிறது.

ஏமாற்றம்..! ஆந்திராவுக்கு 2, தமிழ்நாட்டுக்கு 0.. ரூ.28,500 கோடி தொழில்துறை ஸ்மார்ட் நகரத் திட்டம்..!

மத்திய அரசு நாட்டில் தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்க, மாநிலங்கள் மற்றும் தனியார் துறையுடன் கூட்டணியில் கிட்டத்தட்ட 100 நகரங்களில் 'பிளக் அண்ட் பிளே' தொழில்துறை பூங்காக்களை உருவாக்குவதாக பட்ஜெட்டில் அறிவித்தது. இதைத் தொடர்ந்து நாட்டின் 12 நகரங்களில் இன்ட்ஸ்ட்ரியல் ஸ்மார்ட் சிட்டி அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சரவை புதன்கிழமை கூட்டத்தில், தேசிய தொழில்துறை தளவாட வளர்ச்சி திட்டத்தின் (National Industrial Corridor Development) கீழ் ரூ.28,500 கோடி முதலீட்டில் 12 இன்ட்ஸ்ட்ரியல் ஸ்மார்ட் சிட்டி அமைக்க ஒப்புதல் அளித்தது. இந்த நடவடிக்கை மூலம் 12 லட்சம் நேரடி வேலைகள் மற்றும் 20 லட்சம் மறைமுக வேலைகளை உருவாக்க முடியும் என மத்திய அரசு கணக்கிட்டு உள்ளது

12 புதிய தொழில்துறை பகுதிகள் திட்டம்:

முதல்: உத்தரகண்ட் மாநிலத்தில் குர்பியா
இரண்டாவது: பஞ்சாபில் ராஜபுரா, பாடியாலா
மூன்றாவது: உத்தரப் பிரதேசத்தில் ஆக்ரா, இங்கு சுத்தமான மற்றும் சுற்றுச்சூழல்-க்கு உகந்த தொழில்துறை வளர்ச்சியைக் கொண்டிருக்கும்
நான்காவது: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ்
ஐந்தாவது: பீகாரில் கயா - இந்த தொழிற்துறை பூங்கா வேளாண்மை, டெக்ஸ்டைல் மற்றும் பொறியியலில் கவனம் செலுத்தும்
ஆறாவது: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏய்கி போர்ட் தொழில்துறை பகுதி.
துறைமுகம் சார்ந்த தொழில்துறை பூங்கா உருவாக்கப்படும்
ஏழாவது: ராஜஸ்தானில் ஜோத்பூர், பாலி
எட்டாவது: ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கோபார்த்தி
ஒன்பதாவது: ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஓரவக்கல்
பத்தாவது: தெலங்கானாவில் ஜாஹீராபாத்
பதினொன்றாவது: கேரளாவில் பாலக்காடு
பன்னிரண்டாவது: ஜம்ஷேத்பூர்-புருலியா-அசன்சோல் பகுதியில் கடைசி தொழிற்துறை பூங்கா அமைக்கப்பட உள்ளது.

இந்த 12 தொழிற்துறை பூங்காவும் மத்திய அரசின் விக்சித் பாரத் இலக்கை அடையும் கொள்கையை ஒத்து அமைகிறது. மேலும் கோல்டன் குவாட்ரிலேட்டர் பகுதியில் இந்த தொழில்துறை ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த தொழிற்துறை பூங்கா மூலம் வேலைவாய்ப்பைத் தாண்டி ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டை ஈர்க்க முடியும்.

மத்திய அரசு ஏற்கனவே நான்கு நகரங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது - டோலரா (குஜராத்), ஆரிக் (மகாராஷ்டிரா), விக்ரம் உத்யோக்பூரி (மத்தியப் பிரதேசம்) மற்றும் கிருஷ்ணபட்டிணம் (ஆந்திரப் பிரதேசம்). இதற்காக தொழில்துறை நிலம் ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது.

இதேபோல் மற்றொரு நான்கு தொழிற்துறை பூங்காவில், அரசின் சிறப்பு நிறுவனம் சாலை இணைப்பு, நீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பைக் கட்டமைக்கும் செயல்பாட்டில் உள்ளது.

ஏற்கனவே எட்டு தொழிற்பூங்கா வளர்ச்சி நிலையில் உள்ள நிலையில் தற்போது அறிவிக்கப்பட்ட 12 புதிய தொழிற்துறை பூங்கா உடன் இந்தியாவில் தற்போது மத்திய அரசு 20 தொழிற்துறை பூங்கா கட்டமைத்து வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+