PM Viksit Bharat Rozgar Yojana: பிரதமர் நரேந்திர மோடி 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றினார். பிரதமர் மோடியின் இன்றைய 122 நிமிட சுதந்திர தின உரை, நீண்ட உரையாக சாதனைப்படைத்துள்ளது. சிந்தூர் தாக்குதல் முதல் சுதர்சன சக்ரா திட்டம் வரையில் பல முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டார்.
இன்றைய சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி PM-விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் இந்திய இளைஞர்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது என்றும், இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக அவர் அறிவித்தார். இந்த திட்டம், இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், தனிநபர்களுக்கு தலா ரூ.15,000 நிதி உதவி நேரடியாக வழங்கப்படும், இது தொழில்முனைவு, திறன் மேம்பாடு மற்றும் சுயசார்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும். இத்திட்டம் குறித்து பிரதமர் மோடி பேசுகையில், "என் நாட்டின் இளைஞர்களே, இன்று ஆகஸ்ட் 15, இந்த சிறப்பு நாளில் நாம் நாட்டின் இளைஞர்களுக்காக ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டத்தை தொடங்குகிறோம். இன்று முதல் பிரதமர் விக்ஸித் பாரத் ரோஜ்கார் யோஜனா செயல்படுத்தப்படுகிறது" என்று தெரிவித்தார்.
மேலும், தனியார் துறையில் முதல் முறையாக வேலைவாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு அரசு ரூ.15,000 வழங்கும், மேலும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்க தொகையும் வழங்கப்படும். இதன் மூலம் சுமார் 3.5 கோடி புதிய வேலைவாய்ப்பு வாய்ப்புகள் உருவாகும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
தகுதி நிபந்தனைகள்
இந்த திட்டத்தில் பலன் பெற விரும்பும் தொழிலதிபர்கள் மற்றும் ஊழியர்கள் சில குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
- முதலில், ஊழியர் 2025 ஆகஸ்ட் 1 முதல் 2027 ஜூலை 31 வரையிலான காலத்தில் EPFO பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் பணியாற்ற ஆரம்பிக்க வேண்டும்.
- அத்துடன், 2025 ஆகஸ்ட் மாதம் முன்பு ஊழியர் எந்தவொரு பதிவு செய்யப்பட்ட நிதிய அல்லது EPFO உறுப்பினராக இருக்கக் கூடாது.
- மேலும், EPF-க்கான நிதி பங்களிப்பு 2025 ஆகஸ்ட் மாதத்திற்குள் பெறப்பட வேண்டும், மற்றும் ஊழியரின் மாத ஊதியம் குறைந்தபட்சம் ரூ.1,00,000 இருக்க வேண்டும்.
- பணியாளர் ஒரு நிறுவனத்தில் குறைந்தது ஆறு மாதங்கள் தொடர்ந்து பணி புரிய வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது.
நிதி உதவி மற்றும் பலன்கள்
- இந்த திட்டத்தின் கீழ், தகுதியான பயனாளிகள் மொத்தம் ரூ.15,000 வரையிலான உதவியை பெறலாம், இது ஒரு மாத EPF ஊதியத்திற்கு சமமாகும்.
- இந்த தொகை, பணியாளரின் சேவை காலத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு தவணைகளாக வழங்கப்படும்.
- முதல் தவணை, ஆறு மாதங்கள் சேவை முடிந்தவுடன் வழங்கப்படும், மற்றும் இரண்டாவது தவணை, 12 மாதங்கள் முடிந்த பிறகு வழங்கப்படும்.
இதில் இரண்டாவது தவணை ஒரு சேமிப்பு திட்டத்தில் செலுத்தப்படும், இது நீண்டகால நிதி ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை ஊழியர்கள் மத்தியில் ஊக்குவிக்கும். இந்த அம்சம், பணியாளர்களுக்கு எதிர்கால பொருளாதார நிலையை மேம்படுத்த உதவும்.


Click it and Unblock the Notifications