அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் புதிய குளோபல் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி சென்டர் கேம்பஸ்-ஐ பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பெங்களூரில் திறந்து வைக்க உள்ளார். சுமார் 1,600 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தக் கேம்பஸ் 43 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
பெங்களூரில் அமைக்கப்பட்டு உள்ள இந்த அதிநவீன போயிங் இந்தியா இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி சென்டர் (BIETC) வளாகம், அமெரிக்காவிற்கு வெளியே இந்த விமான நிறுவனம் செய்த மிகப்பெரிய முதலீடாக உள்ளது.

பெங்களூர்: இந்தியாவின் ஐடி தலைநகரமான பெங்களூரில் புறநகர் பகுதியான தேவனஹள்ளி-யில் உள்ள ஹைடெக் டிஃபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் பூங்காவில் போயிங் நிறுவனத்தின் புதிய வளாகம் அமைந்துள்ளது. மேலும் உலக விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைக்கான அடுத்தத் தலைமுறை தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதில் இந்திய முக்கியப் பங்கு வகிக்கும்.
பெண்களுக்கான திட்டம்: மேலும் இந்தத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி 'போயிங் சுகன்யா' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டம் மூலம் இந்தியாவில் வளர்ந்து வரும் விமானத் துறையில் இந்தியா முழுவதும் இருந்து அதிகப்படியான பெண்கள் நுழைவதை ஆதரிக்கப்பட உள்ளது என இத்திட்டம் குறித்து ஒரு அதிகாரி கூறினார்.
போயிங் சுகன்யா திட்டம்: இந்தத் திட்டம் பெண்கள் STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் துறைகளில் முக்கியமான திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும், விமானத் துறையில் வேலைகளுக்குப் பயிற்சி பெறுவதற்கும் வாய்ப்புகளை வழங்கும் என்று தெரிகிறது.
போயிங் சுகன்யா திட்ட பலன்கள்: இந்தியாவில் இருக்கும் இளம் பெண்கள் STEM பிரிவில் வேலைவாய்ப்புகளில் ஈடுபடவும், இத்துறையில் அவர்களுக்கான ஆர்வத்தைத் தூண்டுவதற்கு 150 இடங்களில் STEM ஆய்வகங்களை இந்தத் திட்டம் மூலம் உருவாக்கப்படும். பைலட் பயிற்சி பெறும் பெண்களுக்குக் கல்வி உதவித் தொகையும் வழங்கப்படும் எனவும் தெரிகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications