அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டம், நாடு முழுவதும் உள்ள 1,300க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட இந்திய ரயில்வேயின் நீண்ட கால திட்டமாகும். இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை தூய்மையாகவும். வசதியாகவும், பயன்படுத்த எளிதாக இருக்கும் வகையில் மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
வைஃபை வசதி
நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள், காத்திருப்பு அரங்குகள், கழிப்பறைகள், தளங்கள் மற்றும் கூரை வசதிகளை மேம்படுத்துவது இதில் அடங்கும். தேவைப்படும் இடங்களில் லிப்ட், எஸ்கலேட்டர்கள் மற்றும் இலவச வைஃபை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். சில நிலையங்களில் நிர்வாக ஓய்வறைகள் மற்றும் வணிக கூட்டங்களுக்கான சிறப்பு பகுதிகள் இருக்கும்.

அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ், 508 ரயில் நிலையங்களை ரூ.24,470 கோடி செலவில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகின்றன. அதில், 103 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்தது. ரூ.1,100 கோடிக்கும் அதிக செலவில் இந்த ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து. மறுசீரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை இன்று பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக திறந்து வைத்தார்.
18 மாநிலங்கள்
மறுசீரமைக்கப்பட்ட இந்த நிலையங்கள் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 86 மாவட்டங்களில் பரவியுள்ளன.தமிழகத்தில் சென்னை பரங்கிமலை, சாமல்பட்டி, சிதம்பரம், திருவண்ணாமலை, மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், போளூர், குழித்துறை ஆகிய 9 அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
இது தவிர மகாராஷ்டிராவில் 17 ரயில் நிலையங்களும், உத்தர பிரதேசத்தில் 20 ரயில் நிலையங்களும் குஜராத்தில் 18 ரயில் நிலையங்களும் மத்திய பிரதேசத்தில் 6 ரயில் நிலையங்களும் இன்று திறக்கப்பட்டன. கர்நாடகாவில் முனராபாத், பாகல்கோட், கடக், கோகக் சாலை மற்றும் தார்வாட் ஆகிய 5 அம்ரித் பாரத் ரயில் நிலையங்களும் இன்று திறக்கப்பட்டன.
கர்நாடகா
இதில் கடக் ரயில் நிலையம் ரூ.23.24 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தார்வாட் ரயில் நிலையம் ரூ.17.1 கோடி முதலீட்டில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. பாகல்கோட் ரயில் நிலைய மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ.16.06 கோடி செலவிடப்பட்டுள்ளது. முனிராபாத் ரயில் நிலையல் ரூ.18.40 கோடி செலவில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. கோகக் ரயில் நிலைய மறுவடிவமைப்புக்காக ரூ.16.98 கோடி செலவாகியுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டத்தின்கீழ், ரயில் நிலைய விற்பனை நிலையங்களில் உள்ளூர் பொருட்கள் விற்கப்படும். இந்த திட்டம் இந்தியாவின் உள்நாட்டு மற்றும் சிறப்பு தயாரிப்புகள் மற்றும் கைவினைப் பொருட்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications