ரஷ்யா: ரஷ்யாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இந்தியாவின் யுபிஐ சேவைகளை பிரிக்ஸ் நாடுகளில் அனுமதிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
பிரேசில் ,ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் கூட்டமைப்பு தான் பிரிக்ஸ் என அழைக்கப்படுகிறது. இந்த கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுகிறது .அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16வது உச்சி மாநாடு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பிரிக்ஸ் கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் இந்தியாவின் யுபிஐ பேமெண்ட்களை தங்களுடைய நாடுகளில் அனுமதிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் யுபிஐ பேமெண்ட் அமைப்பை ஏற்றுக் கொண்டிருப்பதையும், மொரீஷியஸ் நாடு யுபிஐ பேமெண்ட்கள அனுமதித்திருப்பதையும் பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த மார்ச் 28ஆம் தேதி துபாயில் யுபிஐ சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டன . துபாயை தலைமை இடமாக கொண்டு செயல்படக்கூடிய மாஸ்ரிக் நிறுவனத்தோடு இந்தியாவின் என்பிசிஐ நிறுவனம் இணைந்து யுபிஐ சேவையை துபாயிலும் அறிமுகம் செய்தன.
எனவே துபாய் செல்லக்கூடிய இந்தியர்கள் இந்தியாவைப் போலவே அங்கும் யுபிஐ பயன்படுத்தி நிதி பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். முன்னதாக மாலத்தீவு அதிபர் முகமது முய்சிவும் இந்தியாவின் யுபிஐ பேமென்ட் நடைமுறைகளை தாங்கள் நாட்டில் ஏற்றுக்கொள்வது என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் டிஜிட்டல் முறையில் நடைபெறும் நிதி பரிவர்த்தனைகளின் விகிதம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 முதல் 19 சதவீதமாக இருந்த டிஜிட்டல் பரிமாற்றங்கள் 2024 மார்ச் மாதத்தில் 40 முதல் 48 சதவீதம் என அதிகரித்துவிட்டன. இருந்தாலும் 60% பரிவர்த்தனைகள் நிதி ரீதியாகவே நடைபெறுகின்றன. ஆனால் இந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பிரமிக்கத்தக்க வகையில் இருப்பதாக ரிசர்வ் பேங்க் அண்மையில் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கை கூறியது.
அதேபோல டிஜிட்டல் பரிமாற்றங்களில் யுபிஐ சேவைகள் தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டபோது தான் யுபிஐ சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
இதனை அடுத்து கொரோனா பெருந்தொற்று காலத்தில் யுபிஐ சேவைகளின் பயன்பாடு வேகம் எடுத்தது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் அதிகமானவர்கள் யுபிஐ வாயிலாகவே நிதி பரிமாற்றங்களை மேற்கொள்கிறார்கள். தற்போது பூடான், பிரான்ஸ், மொரிஷியஸ், நேபாளம் ,சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இந்தியாவின் யுபிஐ பேமெண்ட்களை ஏற்றுக் கொள்கின்றன.


Click it and Unblock the Notifications