கடந்த 10 ஆண்டுகளில் மின்னணு சாதனங்கள் மற்றும் செல்போன் உற்பத்தியில் இந்தியா மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். செல்போன் என்பது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமான சாதனங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அதன்படி, மொபைல் போன் தயாரிப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. நாட்டில் பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 99% சாதனங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் உள்நாட்டு மின்னணுவியல் துறை கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2014-15 முதல் 2023-24 வரை மின்னணு உற்பத்தி மதிப்பு ரூ.1.9 லட்சம் கோடியில் இருந்து ரூ.9.52 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களையும், மொபைல் ஏற்றுமதி செய்யும் நாடாக உருவெடுத்ததையும் இந்த மாற்றம் எடுத்துக்காட்டுகிறது. எலக்ட்ரானிக்ஸ் துறை நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 25 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக கடந்த டிசம்பர் 19ம் தேதி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத், நாடாளுமன்றத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார். இதேபோல், உலக அளவிலான செல்போன் தயாரிப்பில் இந்தியா 2வது இடத்தில் இருப்பதாக கடந்த 4ம் தேதி மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், இன்று, அட்வான்டேஜ் அசாம் 2.0 மற்றும் முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சி மாநாடு 2025 ஐத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். அதில், அசாமில் டாடா குழுமத்தின் சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுவுள்ள செமிகண்டக்டர் அசெம்பிளி அண்ட் டெஸ்ட் ஆலை, முழு வடகிழக்கு பிராந்தியத்திற்கும் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று பாராட்டு தெரிவித்தார். இந்த ஆலை Morigaon மாவட்டத்தில் ரூ. 27,000 கோடியின் முதலீட்டில் கட்டப்படவுள்ளது. இங்கு நாள்தோறும் 48 மில்லியன் செமிகண்டக்டர் சிப்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இது உலகளாவிய செமிகண்டக்டர் துறையில் இந்தியாவின் நிலையை கணிசமாக உயர்த்தும்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மொபைல் உற்பத்தியில் ஏற்பட்ட முன்னேற்றத்தை குறிப்பிட்ட பிரதமர் மோடி, அரசியல் ஸ்திரதன்மை மற்றும் நல்லாட்சியால் இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை உயர்ந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். இந்த வளர்ச்சிக்கு கொள்கை அடிப்படையிலான மறுசீரமைப்புகள், தொடக்க நிறுவனங்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் ஆதரவு, மற்றும் உற்பத்தி-இணைந்த ஊக்கத்தொகை (PLI) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதி ஊக்கத்தொகைளே காரணம் என்று பிரதமர் கூறினார்.
செமிகண்டக்டர் உற்பத்தியில், முக்கிய பங்கு வகிக்கும் அசாமின் வளர்ச்சியை எடுத்துரைத்த பிரதமர் மோடி, Jagiroad-ல் டாடா செமிகண்டக்டரின் சமீபத்திய அசெம்பிளி மற்றும் தொழில்நுட்ப வசதி தொடங்கியதை அவர் பாராட்டி, இது புதுமையை ஊக்குவிப்பதோடு, அசாமை வடகிழக்குக்கான தொழில்நுட்ப மையமாக நிலைநிறுத்தும் என்று கூறினார். நாட்டின் சுற்றுச்சூழல் பொறுப்புகளுடன் இணக்கமான முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, இந்தியாவின் புதுப்பிக்கத் தக்க பசுமை எரிசக்தி இயக்க முன்னெடுப்பு தற்போது உலகளாவிய அளவுகோலாக பரிசீலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications