பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்ததில் இருந்து ரெப்போ விகிதத்தை உயர்த்திப் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் திட்டத்தில் தீவிரமாக இருக்கிறது ரிசர்வ் வங்கி.
இந்நிலையில் இன்று ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு முதலீட்டை திரட்டி தரும் ஒரு திட்டத்தையும், வங்கி நிர்வாகத்தை மேம்படுத்தும் ஒரு திட்டம் என இரு முக்கியத் திட்டத்தைப் பிரதமர் மோடியின் கைகளால் துவக்கி வைக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரென்ஸ் வாயிலாக ரிசர்வ் வங்கியின் ரீடைல் டைரெக்ட் திட்டத்தையும், Integrated Ombudsman திட்டத்தையும் துவக்கிவைத்துள்ளார். இதில் ரீடைல் டைரெக்ட் திட்டம் வாயிலாக மத்திய அரசு முதலீட்டுச் சந்தையில் நேரடியாக மக்களிடம் இருந்து முதலீட்டை திரட்டும் வாய்ப்பை பெற உள்ளது.
கொரோனா காலம்
இவ்விரு திட்டங்களைத் துவங்கி வைத்துப் பேசி மோடி, கொரோனா காலத்தில் நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி மற்றும் இதர நிதி அமைப்புகள் இணைந்து மிகவும் சிறப்பான முறையில் இயங்கி கொரோனா பாதிப்புகளை எதிர்த்துப் போராடினர்.
ரிசர்வ் வங்கி
இந்திய நிதி சந்தையின் நிர்வாக அமைப்பாக இருக்கும் ரிசர்வ் வங்கி தொடர்ந்து அனைத்து நிதி அமைப்புகளிடமும் தொடர்பில் இருந்து வருகிறது, மேலும் தேசத்தின் எதிர்பார்ப்பை ரிசர்வ் வங்கி நிச்சயம் பூர்த்தி செய்வார் எனவும் பேசியுள்ளார்.
வங்கித் துறை
Integrated Ombudsman அமைப்புத் தற்போது முழுமையாக வளர்ச்சி அடைந்து முழு அமைப்பைப் பெற்றுள்ளது. மேலும் இனி வங்கித்துறையில் இருக்கும் அனைத்து வாடிக்கையாளர்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கும், கேள்விகளுக்கும் உடனடியாகத் தீர்வு காண முடியும் எனவும் மோடி பேசியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி
இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு அரசு பத்திரங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் நிலையில் ரீடைல் முதலீட்டு வாயிலாக மக்கள் நேரடியாக முதலீடு செய்வது மூலம் நாட்டின் வளர்ச்சியிலும் நேரடியாகப் பங்கு பெற முடியும். ரிசர்வ் வங்கியின் இரு திட்டங்களும் இந்திய நிதியியல் சந்தைக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications