டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டத்தினை அறிவித்துள்ளது.
இளைஞர்களுக்கு தீபாவளிக்கு இது மெகா பரிசாகவே இருக்கும் எனலாம். இந்த ரோஸ்கர் திட்டத்தில் 75,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கடந்த 8 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக, இந்திய உலகின் 5 மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக மாறியுள்ளது.

வேலை வாய்ப்பு திட்டம்
மத்திய அரசு தொடர்ந்து இளைஞர்களுக்கு அதிகபட்சமான வேலை வாய்ப்பினை உருவாக்குவதற்கு, பல்வேறு வழிகளில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. தற்போது சர்வதேச அளவில் பொருளாதாரம் சரியில்லை. பல பெரிய பொருளாதார நாடுகளும் திண்டாடி வருகின்றன.

இந்தியாவின் முயற்சி
பல நாடுகளில் பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை உச்சத்தில் உள்ளது. தொற்றி நோய் குறித்து கூறிய பிரதமர் மோடி, அதன் தாக்கம் இன்னும் சிறிது காலத்திற்கு நீடிக்கும் என்றும் கூறியுள்ளார். இந்தியா தனது சொந்த முயற்சிகள் மூலம், உலகளாவிய நெருக்கடியில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முயற்சித்து வருகிறது.

உங்கள் உதவி தான் காரணம்
உங்கள் உதவியால் இதுவரை நம்மை காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. கடந்த 8 ஆண்டுகளில் நமது பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை குறைத்துள்ளோம். வளர்ந்த நாடு என்ற நிலையை எட்ட சரியான சுயசார்பு என்ற பாதையில் சென்று கொண்டுள்ளோம் என கூறியுள்ளார்.

என்ன பணி?
புதியதாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டவர்கள் நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் பணியில் அமர்த்தப்படுவார்கள். குறிப்பாக மத்திய காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், கீழ் நிலை எழுத்தர்கள், சுருகெழுத்தர்கள், தனி உதவியாளர்கள், வருமான வரி ஆய்வாளர்கள் என பல்வகை பதவிகளுக்கான நியமனங்களாக இந்த ஆணைகள் இருக்கும்.