கேரளாவில் புது கிரெடிட் கார்டு அறிமுகம் செய்த பிரதமர் மோடி.. யாருக்கு கிடைக்கும்? நன்மை என்ன? - முழு விபரம்

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திருவனந்தபுரத்திற்கு சென்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மோடியின் வருகை 2026ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கான துவக்கமாக பார்க்கப்படுகிறது. மேலும் திருவனந்தபுரம் கார்ப்ரேஷன் தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்ற பின்பு முதல் முறையாக மோடி கேரளாவுக்கு வருவதால் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டுகிறது.

மோடி கேரள பயணத்தில் 5 முக்கிய திட்டங்களை துவங்கி வைத்தார், இதில் மிகவும் முக்கியமானது PM SVANidhi Credit Card சேவை அறிமுகம் தான். இதை தாண்டி 4 புதிய ரயில் சேவைகளையும் துவங்கி வைத்துள்ளார் மோடி.

கேரளாவில் புது கிரெடிட் கார்டு அறிமுகம் செய்த பிரதமர் மோடி.. யாருக்கு கிடைக்கும்? - முழு விபரம்

PM SVANidhi Credit Card சேவை என்பது என்ன..?
பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரதான் மந்திரி சாலையோர வியாபாரிகள் ஆத்மநிர்பர் நிதி (PM SVANidhi) திட்டத்தின் அடுத்த கட்டமாக புதிய SVANidhi கிரெடிட் கார்டு சேவையை தொடங்கி வைத்தார்.

இந்த UPI இணைப்பு ரூபே கிரெடிட் கார்டு சாலையோர வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன் வசதியை வழங்குகிறது. இந்த சேவை மூலம் சாலையோர வியாபாரிகள் தங்களுடைய வர்த்தகம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்கான தினசரி பண தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்துக்கொள்ள முடியும்.

கொரோனா தொற்று மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளின் நலனுக்காக 2020 ஜூன் மாதம் தொடங்கப்பட்ட PM SVANidhi திட்டம் இப்போது மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெற்ற மக்கள் இரண்டாம் தவணை கடனை சரியாக திருப்பி செலுத்தியவர்களுக்கு மட்டும் இந்த கிரெடிட் கார்டு கிடைக்கும். சரி கிரெடிட் கார்டின் மற்ற விபரங்களை, இப்போது பார்ப்போம்.

கிரெடிட் கார்ட் விபரம்:
இந்த ரூபே ரீடைல் கிரெடிட் கார்டு UPI உடன் இணைந்து இயங்கும். இந்த கிரெடிட் கார்டில் ஆரம்ப கடன் வரம்பு ரூ.10,000 ஆக உள்ளது. சரியான பயன்பாடு மற்றும் திருப்பிச் செலுத்தும் செயல்பாடுகள் அடிப்படையில் படிப்படியாக ரூ.30,000 வரை உயர்த்தப்படும். இந்த கார்டுக்கு ஜாயினிங் அல்லது ஆண்டு கட்டணம் இல்லை - வாழ்நாள் இலவச கார்டு என்பதால் கூடுதல் சுமையில்லை.

இந்தி கிரெடிட் கார்டில் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கு 50 நாட்கள் வரை வட்டியில்லா கால அவகாசம் உள்ளது. மேலும் இந்த கார்டு 5 ஆண்டுகள் செல்லுபடியாகும்.

தகுதிகள்
இந்த கார்டு PM SVANidhi கடன் திட்டத்தில் நிதி ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்டு வியாபாரிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. PM SVANidhi கடன் திட்டத்தில் வாங்கிய கடனில் முதல் இரண்டு தவணைகளை சரியாக திருப்பிச் செலுத்தியவர்கள் மட்டுமே கிரெடிட் கார்டு பெற தகுதியுடையவர்கள். மூன்றாம் தவணை கடன் (₹50,000 வரை) தகுதி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

நன்மைகள் மற்றும் சலுகைகள்
இந்த கார்டை பயன்படுத்தினால் ரிவார்ட் பாயிண்ட்ஸ் கிடைக்கும், உதாரணமாக ரூ.100க்கு 1 பாயிண்ட் அளிக்கப்படும். PM SVANidhi கடன் மற்றும் கிரெடிட் கார்டை தொடர்ந்து பயன்படுத்தி கடனை திருப்பிச் செலுத்துவதால் வியாபாரிகள் முறையான நிதி அமைப்புக்குள் நுழையலாம். இது எதிர்காலத்தில் பெரிய கடன்கள் பெற உதவும்.

இந்த திட்டம் சாலையோர வியாபாரிகளின் நிதி சுதந்திரத்தை வலுப்படுத்தும். உடனடி கடன், டிஜிட்டல் பயன்பாடு, கிரெடிட் வரலாறு உருவாக்கம் ஆகியவை இதன் முக்கிய நன்மைகளாக பார்க்கப்படுகிறது.

PM SVANidhi திட்டம்:
மத்திய அரசு புதிய மறுசீரமைக்கப்பட்ட PM SVANidhi கடன் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் முதல் தவணையில் ரூ.15,000 வரை, இரண்டாம் தவணையில் ரூ.25,000 வரை, மூன்றாம் தவணையில் ரூ.50,000 வரை கடன் பெறலாம். இந்த கடனை வாங்கிய சரியமான முறையில் கடனை செலுத்தியவர்களுக்கு மட்டுமே கிரெடிட் கார்டு கிடைக்கும்.

ஆகஸ்ட் 2025ல் இத்திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, கடன் திட்டத்தின் காலத்தை மார்ச் 2030 வரையில் நீட்டிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக ஒட்டுமொத்தமாக ரூ.7,332 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தால் மொத்தம் 1.15 கோடி வியாபாரிகள் பயனடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 50 லட்சம் புதிய பயனாளர்களும் அடங்குவர்.

இத்திட்டம் கடன் மட்டுமல்லாமல் மக்களுக்கு நிதியியல் புரிதல், திறன் மேம்பாடு, நலத்திட்டங்களுடன் தொடர்புபடுத்துதல் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் நிதி சேவைகள் துறை இணைந்து மாநில அரசுகள், வங்கிகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இத்திட்டம் செயல்படுத்துகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+