இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிப்ரவரி 13 செவ்வாய்க்கிழமை, இந்தியாவின் UPI மற்றும் RuPay கார்டு சேவைகளை UAE-யை மக்களின் பயன்பாட்டுக்காக அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் UPI மற்றும் RuPay கார்டு சேவைகளைத் தொடங்குவதற்கு முன், பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி முகமது பின் சயீத் ஆகியோர் மத்தியில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த சந்திப்பு நடந்தது.

மேலும் இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. பிரதமர் மோடியின் இந்தச் சந்திப்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா ஆகியோர் இருதரப்பு பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதன் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருக்கும் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ராசல் கைமா மற்றும் புஜைரா ஆகிய எமிரிகளிலும் UPI மற்றும் RuPay கார்டு பயன்படுத்திப் பேமெண்ட் செய்துகொள்ள முடியும்.
இதன் மூலம் UAE-யில் இருக்கும் இந்தியர்களும் சரி, இந்தியாவுக்கு வரும் எமிரிகளும் சரி UPI மற்றும் RuPay கார்டு பயன்படுத்திப் பேமெண்ட் செய்ய முடியும். இதேபோல் இந்தியாவில் இருந்து UAE-க்கும், UAE-யில் இருந்து இந்தியாவுக்கும் பணம் அனுப்ப முடியும். இரு நாடுகள் மத்தியிலான கிராஸ் பார்டர் நிதி பரிமாற்றங்களுக்கு 2023 ஜூலை மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
பிப்ரவரி 12 ஆம் தேதி இலங்கை மற்றும் மொரிஷியஸில் இந்திய அரசு யுபிஐ சேவையை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் மொரிஷியஸ் நாட்டில் கூடுதலாக ரூபே கார்ட் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டது.
பரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ளார். பிரதமர் அபுதாபியில் BAPS இந்து கோவிலை திறந்து வைப்பதற்காகச் சென்றுள்ளார், இத்திறப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று இந்தியாவின் UPI மற்றும் RuPay கார்டு சேவைகள் UAE-யில் அறிமுகப்படுத்தப்பட்டது. அபுதாபியில் கட்டப்பட்ட முதல் இந்து கோவில் இது.
பிரதமர் மோடி இன்று அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.


Click it and Unblock the Notifications