டெல்லி: ஜூலை 23ஆம் தேதி 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட்டிற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் உள்ள மத்திய அரசின் திங்க் டேங்க் அமைப்பான நித்தி அயோக் அலுவலகத்தில் நாட்டின் முன்னணி பொருளாதார வல்லுநர்களுடன் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நித்தி அயோக் அமைப்பின் துணைத் தலைவர் சுமன் பெரி, பிரதமர் முதன்மைச் செயலாளரான பி.கே.மிஸ்ரா மற்றும் முன்னணி பொருளாதார வல்லுநர்கள், நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

ரஷ்யா-ஆஸ்திரியா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி வியாழன் அன்று மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இரண்டு வாரங்களே இருக்கும் வேளையில் முன்னணி பொருளாதார நிபுணர்களை சந்தித்துள்ளது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியா தற்போது ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் வேளையில், இந்த பட்ஜெட் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் வாயிலாக இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கில் கவனம் செலுத்தப்படப் பிரதமர் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கியுள்ளார்.
மத்திய அரசின் நித்தி அயோக் அமைப்பு, கள நிலவரத்தையும், மத்திய அரசின் பரிந்துரைகளையும், தொழிற்துறையின் கோரிக்கைகளையும், எதிர்கால வளர்ச்சிக்கான இலக்குகளை என நான்கு முனைகளை இணைத்து பட்ஜெட் தயாரிக்கவும், வளர்ச்சி திட்டங்களை வகுக்கவும் உதவியுள்ளது. இதன் அடிப்படையில் தான் ரஷ்யா-ஆஸ்திரியா சுற்றுப்பயணத்தை முடித்த கையோடு பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தை நடத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் அதிகப்படியான வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய இரு முக்கிய கருத்தை மையமாக வைத்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் இக்கூட்டத்தில் புதிய மற்றும் நிலுவையில் உள்ள கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் நிதி முதலீட்டு உத்திகள் உட்பட அனைத்து முக்கியமான கொள்கைப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது.
மத்திய பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை மாதம் 22-ஆம் தேதி தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து 23-ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் டிஜிட்டல் பட்ஜெட் அறிக்கையாகத் தாக்கல் செய்ய உள்ளார். இது நரேந்திர மோடி அரசின் மூன்றாவது ஆட்சிக் காலத்திற்கான முதல் பட்ஜெட் என்பதால் கூடுதல் கவனத்தைப் பெறுகிறது.
பிப்ரவரி மாதம் லோக்சபா தேர்தலின் காரணமாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications