இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஒட்டுமொத்த மத்திய அரசும் பணியாற்றி வரும் வேளையில் நாளை பிரதமர் மோடி முக்கியமான கூட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ளார். தற்போது மத்திய அரசுக்கு இருக்கும் முக்கியமான சவால் என்னவென்றால் வேலைவாய்ப்பை உருவாக்குவதும், ஏற்றுமதி - உற்பத்தி அடிப்படையிலான வர்த்தகத்தை மேம்படுத்து தான்.
இதேபோல் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பல்வேறு ஊக்க திட்டத்தை எப்படி ஸ்ட்ரீம்லைன் செய்து அடுத்தக்கட்ட ஊக்கத்தை வர்த்தக சந்தைக்கு அளிப்பது என்பது மத்திய அரசு முக்கியமான சவலாக இருக்கும்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30 ஆம் தேதியன்று நாட்டின் முன்னணி பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களுடன் முக்கியமான சந்திப்பை பட்ஜெட் 2026 அறிக்கை தயாராகும் முக்கியமான கட்டத்தில் நடத்த உள்ளார்.
இந்த சந்திப்பில் நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் குறித்த அவர்களது கருத்துகளை கேட்டறிய திட்டமிடப்பட்டுள்ளது. அரசு உயரதிகாரி ஒருவர் இந்த தகவலை ஹிந்து பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார். இது பட்ஜெட் தயாரிப்பின் முக்கிய கட்டமாக இந்த சந்தைப்பை பார்க்கப்படுகிறது.
இதேவேளையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2025 அன்று தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் உலகளாவிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைமைகளுக்கு மத்தியில் தயாராகிறது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
குறிப்பாக அமெரிக்கா இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்திருப்பது பெரும் சவாலாக உள்ளது. இத்தகைய சூழலில் பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த சந்திப்பில் நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி, நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் மற்றும் நிதி ஆயோகின் பிற உறுப்பினர்களும் கலந்துகொள் உள்ளனர். பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறை நிபுணர்களுடன் இணைந்து பட்ஜெட் குறித்த அவர்களுடைய கருத்தையும், பார்வையையும் மோடியுடன் இக்கூட்டத்தில் பகிர்ந்துகொள்வர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பு இந்திய பொருளாதாரத்தின் திசையை தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக உள்ளது. உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்களும் இந்த பட்ஜெட்டில் இருந்து பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். மோடி தலைமையிலான அரசு இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா என்பதை காத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications