சுந்தர் பிச்சை உடன் பிரதமர் மோடி திடீர் பேச்சுவார்த்தை.. எதற்காக தெரியுமா..?

உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட்-ன் சிஇஓ-வாக இருக்கும் சுந்தர் பிச்சை உடன பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இணைந்து பேசினார். இந்த சந்திப்பிற்கு முக்கியமான காரணம் உண்டு.

சுந்தர் பிச்சை மற்றும் பிரதமர் மோடி மத்தியிலான இந்த சந்திப்பில் முக்கியமான விவாதமாக இருந்தது, இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு தான். இந்தியாவில் HP நிறுவனத்துடன் இணைந்து கூகுள் சமீபத்தில் அதனுடைய க்ரோம்புக் லேப்டாப்-களை தயாரிக்க உள்ளதாக அறிவித்தது.

சுந்தர் பிச்சை உடன் பிரதமர் மோடி திடீர் பேச்சுவார்த்தை.. எதற்காக தெரியுமா..?

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கூகுள் இந்தியாவில் க்ரோம்புக்ஸ் தயாரித்து உள்நாட்டில் குறைந்த விலையில் விற்பனை செய்வது மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு உள்ளது.

மேலும் இந்த சந்திப்பில் பிரதமர் மோடி, கூகுள் நிறுவனத்தின் 100 மொழி முன்மொழிவு, ஏஐ டூல்ஸ்-ஐ இந்திய மொழியில் கொண்டு வருவதை பாராட்டினார். இந்தியாவின் முன்னேற்றத்திற்கான தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும், நிர்வாகத்தின் தரத்தை மேம்படுத்தக்கூடிய AI கருவிகளில் கூகுளின் முயற்சிகளை கவனம் செலுத்துமாறு மோடி ஊக்குவித்தார்.

சுந்தர் பிச்சை உடனான சந்திப்பில் குஜராத் மாநிலத்தின் காந்திநகர பகுதியில் அமைந்துள்ள GIFT சிட்டியில் கூகுள் நிறுவனத்தின் குளோபல் பின்டெர் ஆப்ரேஷன்ஸ் சென்டர் அமைப்பது குறித்து பேசினார். இதை தொடர்ந்து டெல்லியில் டிசம்பர் மாதம் நடைபெறும் AI SUMMIT நிகழ்ச்சியில் கூகுள்-ஐ கலந்துக்கொள்ள அழைப்பு விடுத்தார் மோடி.

இந்த சந்திப்பில் சுந்தர் பிச்சை உடன் பிரதமர் மோடி பல தரப்பட்ட தனியார் மற்றும் பொது துறை முதலீடு குறித்து பேசினார். அதிலும் குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை உள்நாட்டு தயாரிப்பு குறித்து அதிகம் முக்கியதுவம் கொடுக்கப்பட்டது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கூகுள், சென்னையில் FLEX நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து க்ரோம்புக்ஸ் தயாரிக்கிறது. ஆகட்ல் 2020 முதல் HP நிறுவனம் FLEX நிறுவனத்துடன் இணைந்து இயக்கி வருகிறது. இதில் க்ரோம்புக்ஸ் என்பது லேப்டாம் போன்றது தான், ஆனால் இந்த லேப்டாப் கூகுள் Chrome operating system மூலம் இயங்க கூடியவை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+