பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை, செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார்.
பாரீஸில் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பாக சுந்தர் பிச்சை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவில், பாரீஸ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு வாய்ப்புகளை கொண்டுவர இருக்கிறது, இது தொடர்பாக நாங்கள் கலந்துரையாடினோம் என சுந்தர் பிச்சை தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு எவ்வாறு இணைந்து செயல்படுவது என்பது குறித்தும் நாங்கள் ஆலோசனை நடத்தினோம் என சுந்தர் பிச்சை தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார். சுந்தர் பிச்சை மோடியுடன் கலந்துரையாடும் புகைப்படங்களும் இந்த பதிவில் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸையும் அவருடைய மனைவியும் இந்தியாவை பூர்விகமாக கொண்டவருமான உஷா வான்ஸ் ஆகியோரை சந்தித்தார். இந்த புகைப்படங்களை அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி என கூறியுள்ளார்.
பல்வேறு தலைப்புகள் குறித்து நாங்கள் கலந்துரையாடினோம் என தெரிவித்துள்ள மோடி, ஜே டி வான்ஸின் மகன் விவேக்கின் பிறந்தநாள் அன்று அவர்களை சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பேசிய போது ஏஐ வளர்ச்சியால் மனித வேலைவாய்ப்புகள் பறிபோய் விடுமோ என்ற அச்சம் தான் இந்த தொழில்நுட்பத்திற்கு மிகப்பெரிய இடையூறாக இருக்கிறது ,ஆனால் எந்த ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியும் மனித வேலைகளை பறித்ததில்லை என கூறினார்.
தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு வேலையின் தன்மையை தான் மாற்றி அமைக்கும் என அவர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாட்டில் ஜனநாயகத்தை புகுத்த வேண்டும் மக்கள் நலனை மையமாக கொண்ட செயல்களை ஊக்குவிக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், ஏஐ தொழில்நுட்பத்தை நிர்வகிக்க சர்வதேச கூட்டு முயற்சி தேவை என கூறினார்.
தன்னுடைய இந்த இரண்டு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக பல்வேறு நிறுவன தலைவர்களையும் மோடி சந்திக்க இருக்கிறார். பாரீஸில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் ஓபன் ஏஐ, கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ஏஐ தொழில்நுட்பத்தை பாதுகாப்பான முறையில் மனிதர்கள் நலனுக்காக பயன்படுத்துவது தொடர்பாக இந்த மாநாட்டில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications