ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 8 - 9 என இரண்டு நாள் அரசு முறை பயணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு சென்றுள்ளார். இந்த சந்திப்பு உலக நாடுகள் மத்தியில் பெரிய அளவில் கவனிக்கப்படுகிறது. ஏன் தெரியுமா..?
மோடி 2014ல் பிரதமரானதில் இருந்து இரு தலைவர்களும் மொத்தம் 16 முறை சந்தித்துள்ளனர், ஆனால் பிப்ரவரி 2022 இல் ரஷ்யா ராணுவம் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததில் இருந்து ஒரு முறை கூட சந்திக்கவில்லை, இந்த இடைப்பட்ட காலத்தில் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையைத் தாண்டி இந்தியா ரஷ்யாவின் கச்சா எண்ணெய் முதல் பல பொருட்களை இறக்குமதி செய்கிறது.

2019 செப்டம்பரில் விளாடிவோஸ்டோக்கில் நடந்த கிழக்கு பொருளாதார கூட்டத்திற்காக மோடி கடைசியாக ரஷ்யா சென்றார், புடின் கடைசியாக 2021 டிசம்பரில் வருடாந்திர இருதரப்பு உச்சி மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருந்தார். இதன் பின்பு பல ஆண்டுகளுக்கு பின்பு இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்துள்ளனர்.
இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்ற பிறகுத் தனது முதல் இருதரப்புப் பயணத்திற்கு (bilateral visit) ரஷ்யாவைத் மோடி தேர்ந்தெடுத்த முக்கியமான மாற்றமாகும். பொதுவாக இந்தியாவின் புதிதாகப் பிரதமர் தேர்வு செய்யப்பட்டால் முதலில் அண்டை நாட்டிற்குச் செல்வது தான் வழக்கம், ஆனால் மோடி இந்த பாரம்பரியத்தை உடைத்துள்ளார்.
மோடி பிரதமராக ஜூன் 2014 பதவியேற்றிய போது பூட்டான் நாட்டிற்கும் ஜூன் 2019ல் 2வது முறை தேர்வு செய்யப்பட்ட போது மாலதீவுகள் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாட்டிற்கும் சென்றார். இந்த நிலையில் 3வது முறையாகப் பிரதமரான பின்பு மோடி கடந்த மாதம் இத்தாலிக்குச் சென்றார், ஆனால் அது G7 தலைவர்களின் கூட்டத்திற்காக இருந்தது. இந்த நிலையில் முதல் அரசு முறை பயணமாக ரஷ்யாவுக்குச் சென்றுள்ளார்.
இந்தியா - ரஷ்யா உறவில் மோடியின் இந்த பயணம் மிகவும் முக்கியமானது மட்டும் அல்லாமல் வெளியுறவுக் கொள்கைக்கு இந்தியா எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதில் இதிலிருந்து காட்டுகிறது.
இதேவேளையில் ரஷ்யாவை எதிர்க்க உருவாக்கப்பட்ட இராணுவக் கூட்டணியான, வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் அதாவது NATO அமைப்பில் உள்ள 32 நாடுகளின் தலைவர்கள் ஜூலை 9-11 வரை வாஷிங்டன் டிசி-யில் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் அதே நேரத்தில் மோடி புடினைச் சந்திக்கிறார் என்பது தான் மாஸ்டர் ஸ்டோர்க்.
ரஷ்யா - இந்தியாவுக்குமான நடப்புறவு சுமார் 70 ஆண்டு காலம், ரஷ்யா இந்தியாவுக்கு அண்டை நாடாக இல்லாவிட்டாலும் இந்தியாவின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் பல நேரத்தில் ரஷ்யா துணையாக நின்றுள்ளது. சோவியத் யூனியன் காலத்தில் இருந்து இந்தியா உடனான உறவு தற்போது பல துறையிலும், பல பிரிவிலும், பல வகையிலும் விரிவாக்கம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 8 - 9 என இரண்டு நாள் அரசு முறை பயணத்தில் எடுக்கப்படும் முக்கியமான முடிவுகள் வர்த்தகம், பொருளாதாரம் தாண்டி நாட்டின் பாதுகாப்புத் துறை வளர்ச்சி மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
ஒருபக்கம் NATO அமைப்பு 75 ஆண்டுகளைக் கொண்டாடும் அதே நேரத்தில் உக்ரைன் நாட்டிற்கான உதவிகள் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முக்கியமான சூழ்நிலையில் தான் மோடி - புடின் சந்திப்பு நிகழ்கிறது, இது ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளுக்கும், அதன் நட்பு நாடுகளுக்கும் சூட்டை கிளப்பியுள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications