மோடியின் புதிய லைட் ஹவுஸ் திட்டம்.. சென்னைக்கு ஜாக்பாட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டு தினத்தில் நாட்டின் 6 முக்கிய நகரங்களில் 6 இடத்தில் தலா 1000 வீடுகளைக் கட்டும் ஒரு மிகப்பெரிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி லைட் ஹவுஸ் திட்டத்தைத் துவக்கி வைத்துள்ளார்.

Recommended Video

அடுத்த கட்டத்தில்.. அனைவருக்கும் வீடு.. சென்னை உள்ளிட்ட நகரங்களில் பிரதமர் அடிக்கல்..!

இந்தியாவில் அனைவருக்கும் வீட்டு என்ற திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டில் உள்ள ஏழை மக்களுக்குப் பயன்படும் வகையில் அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவு (EWS) குடும்பங்களுக்கு உதவும் விதமாகப் பசுமை கட்டுமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 6 நகரங்களில் தலா 1000 வீடுகளைக் கட்டும் திட்டம் தான் இந்த லைட் ஹவுஸ் திட்டம்.

மார்ச்31 வரை ஹெச்1பி விசா மீது தடை.. டிரம்ப் உத்தரவால் ஐடி ஊழியர்கள் சோகம்..! மார்ச்31 வரை ஹெச்1பி விசா மீது தடை.. டிரம்ப் உத்தரவால் ஐடி ஊழியர்கள் சோகம்..!

பசுமை கட்டுமான தொழில்நுட்பம்

பசுமை கட்டுமான தொழில்நுட்பம்

பசுமை கட்டுமான தொழில்நுட்பத்தை எனப்படும் green construction technology பயன்படுத்திக் கட்டப்படும் இந்த வீடுகள் அனைத்தும் வலிமையானதாகவும் அதேநேரத்தில் மலிவு மற்றும் வசதியானவையாகவும் இருக்கும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

புத்தாண்ட்டுத் தினத்தில் இந்த மாபெரும் லைட் ஹவுஸ் திட்டத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைத்துள்ளார்.

 

6 நகரங்கள்

6 நகரங்கள்

இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் இந்தோர், சென்னை, ராஞ்சி, அகர்டாலா, லக்னோ மற்றும் ராஜ்கோட் ஆகிய நகரங்களில் தலா 1000 வீடுகளைப் பசுமை கட்டுமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.

இத்திட்டம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவு (EWS) குடும்பங்கள் தங்குவதற்கு வீடு கிடைக்கும்.

 

மலிவு விலையில் வீடு

மலிவு விலையில் வீடு

இதுமட்டும் அல்லாமல் இத்திட்டம் வெற்றிகரமான முடிக்கப்படும் நிலையில் இந்தியாவில் மலிவு விலையில் வீடு கட்டுமானங்கள் பிரிவில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை இதன் வாயிலாக எளிதாக முடிக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.

ஆஷா திட்டம்

ஆஷா திட்டம்

இந்தியாவில் மார்டன் கட்டுமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஆஷா இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. Affordable Sustainable Housing Accelerators-India (ASHA-India).

எல் அண்ட் டி

எல் அண்ட் டி

சமீபத்தில் தமிழ்நாட்டில் எல்&டி நிறுவனத்தின் காஞ்சிபுரம் தொழிற்சாலையில் 3டி பிரிண்டிங் முறையில் சுமார் 700 சதுரடியில், இந்நிறுவனத்தின் ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்ட பிரத்தியேகமான முறையிலும், சரியான திட்டமிடல் உடன் உருவாக்கப்பட்ட சிறப்புக் கான்கிரீட் கலவையைக் கொண்டு இந்த வீட்டு கட்டப்பட்டு உள்ளது.

இந்த வீட்டு முதல் தளம் கொண்ட வீடு என்பதால் அனைத்து தரப்பு மக்களும் இதேப்போன்ற வீடுகளை கட்ட முடியும். இது இந்திய ரியல் எஸ்டேட் கட்டுமான துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

 

தமிழ்நாடு முன்னோடி

தமிழ்நாடு முன்னோடி

அனைத்தும் துறையிலும் முன்னோடியாக இருக்கும் தமிழ்நாடு எல் அண்ட் டி-யின் 3டி பிரிண்டிங் திட்டத்தாலும், மத்திய அரசின் லைட் ஹவுஸ் திட்டத்தாலும் ரியல் எஸ்டேட் கட்டுமானத்தில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பெரிய வளர்ச்சியை அடையக் காத்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM Modi's New Light House Projects: Chennai on list of 6 cities

PM Modi's New Light House Projects: Chennai on list of 6 cities
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X