பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேசியதாக அறிவித்துள்ளார். இந்த போன் காலில் புடின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் அலாஸ்காவில் நடைபெற்ற சமீபத்திய சந்திப்பு குறித்த தனது நிலைப்பாடுகளை பகிர்ந்து கொண்டதாக பிரதமர் மோடி எக்ஸ் பதிவு வாயிலாக தெரிவித்துள்ளார்.
புடின் - டிரம்ப் மத்தியிலான சந்திப்பு உலகளவில் கவனிக்கப்பட்ட நிலையில், ரஷ்யா -உக்ரைன் மத்தியிலான போர் மற்றும் தாக்குதலுக்கு விரைவில் நிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியானது. இதோடு அமெரிக்கா - ரஷ்யா மத்தியிலான உறவு மேம்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை திங்கட்கிழமை சந்திக்க உள்ளார். இதற்கிடையில் தான் மோடியுடன் பேசியுள்ளார் விளாடிமிர் புடின். டிரம்ப்-புடின் சந்திப்பில் உக்ரைன் விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படாவிட்டாலும், ஜெலென்ஸ்கி சந்திப்பில் சாதகமான முடிவு வரலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
மோடி, புடின் உடனான தொலைப்பேசி அழைப்பில் உக்ரைன் பிரச்சனைக்கு இந்தியா தொடர்ந்து சர்வதேச அரங்கில் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வை ஆதரிப்பதாக வலியுறுத்தியுள்ளார். மேலும் இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகளையும் ஆராய்ந்ததாக மோடி குறிப்பிட்டுள்ளார். இது இந்தியா-ரஷ்ய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பை உருவாக்குகிறது.

இதேவேளையில் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு ரஷ்ய எண்ணெய் வாங்கியதற்காக டிரம்ப் இந்தியா மீது மட்டும் குறிவைத்து 25 சதவீத கூடுதல் வரியை விதித்தது. இது டிரம்ப்- புடின் சந்திப்பிற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் பேசுகையில் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இந்த வரி விதிப்பை மறுபரிசீலனை செய்யலாம் என பேசினார்.
இந்த மறுபரிசீலனையில் இந்தியா மீதான வரியை அபராத வரியாக விதித்த 25 சதவீத வரியை மொத்தமாக நீக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications