டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் தசாப்தம் இந்திய தொழில் முனைவோருக்கானதாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கிர்லோஸ்கர் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, வரவிருக்கும் தசாப்தங்கள் இந்திய தொழில் முனைவோருக்கு இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் அரசின் 5 டிரில்லியன் டாலர் இலக்கினை அடையவும், கனவை நனவாக்கவும் இது ஒரு படியாக இருக்கும் என்றும் தொழில் அதிபர்களை ஊக்கப்படுத்தியும் பேசியும் உள்ளார்.
இலக்கு மிகப் பெரியது
மேலும் அக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாங்கள் புதிய தசாப்தத்திற்குள் நுழையும் போது, அந்த தசாப்தம் இந்திய தொழில் முனைவோருக்கானதாக இருக்கும் என்று நான் கூற விரும்புகிறேன். மேலும் மத்திய அரசின் 5 டிரில்லியன் டாலர் இலக்கு என்பது ஒரு படி தான். ஆனால் எங்கள் கனவும் இலக்கும் அதை விட பெரியது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கை
இந்திய தொழில் முனைவோருக்கு ரிஸ்க் எடுக்கும் திறமை உள்ளது. மேலும் அவர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்துவதற்காக விருப்பம் உள்ளது. மேலும் அவர்கள் புதிய துறைகளில் சாதனை படைக்க விரும்புகின்றனர். ஆக தொழில் துறையினர் அதை மேம்படுத்த வேண்டும். மேலும் தற்போது அரசு ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் தொழில் துறையினர் அதை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
தொழில் துறையினருக்கு துணை
அரசு தொழில் துறையினருக்கு உறுதுணையாக அருகில் நிற்கும் போது, உண்மையான தொழில்முனைவோர் முன்னுக்கு வருவர் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கம் உள்நோக்கத்துடன் சீர்திருத்த முயற்சியுடன் செயல்பட்டது. ஒருமை பாட்டுடனும் செயல்பட்டது என்றும் பிரதமர் கூறியுள்ளார். இது தொழில்துறையினரை மேலும் மேம்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.
கார்ப்பரேட்களுக்கு இதுவரை இல்லாத வரி குறைப்பு
இது தவிர இந்திய தொழில் துறையினரை மேம்படுத்தும் விதமாக இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிஎஸ்டியும் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர பொதுத்துறை வங்கிகளின் சீர்திருத்தங்கள் நீண்டகாலமாக செய்யபட்டு வருகின்றது. மேலும் இந்திய தொழில் துறையில் உள்ள பல தடைகள் நீக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆக இதுபோன்ற அரசின் நடவடிக்கையானது வரவிருக்கும் தசாப்தங்களில் நிச்சயம் கைகொடுக்கும் என்றும் நாமும் நம்புவோம்..
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications