கொரோனா வைரஸைப் பற்றி அதிகம் விளக்கத் தேவை இல்லை. உலகம் முழுக்க சுமாராக 2.30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கொரோனாவால் உலக அளவில் சுமார் 9,350 பேர் மரணடைந்து இருக்கிறார்கள்.
இது உலகம் முழுக்க சுமார் 125 நாடுகளுக்கு மேல் இந்த கொடூர் அவைரஸ் பரவி, ஒட்டு மொத்த உலகத்தையும் பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் சுமார் 171 பேருக்கு கொரோனா பரவி இருக்கிறது. அதில் 4 பேர் மரணம் அடைந்துவிட்டார்கள். இந்தியாவில் அதிகபட்சமாக, இந்தியாவின் பணக்கார மாநிலமான மகாராஷ்டிராவில் 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது நினைவு கூறாத்தக்கது.
பொருளாதாரம்
இந்த கொரோனா வைரஸ் ஏதோ, ஒரு சில நாட்டில் வந்தோமா போனோமா என்று இல்லாமல், சுமாராக உலகம் முழுக்க பரவி, உலக வர்த்தகத்தையே ஸ்தம்பிக்க வைத்து இருக்கிறது. மக்கள் ஒன்று கூடினால் கொரோனா வந்துவிடுமோ என்கிற பயம் பயங்கரமாக அதிகரித்து இருக்கிறது.
தொழில் காலி
எனவே உற்பத்தி ஆலைகள், கூலி வேலைகள், ஹோட்டல்கள், சுற்றுலா தளங்கள், மால், உணவகம் என மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைக் கொடுக்கும் இடங்கள் எல்லாம் இப்போது மக்கள் வர முடியாத இடமாக மாறிவிட்டது. இந்த இடங்களில் எல்லாம் அடிப்படை வேலைகளைச் செய்பவர்கள் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தானே.
பிழைப்பு பாதிப்பு
கொரோனா வைரஸால் மேலே சொன்ன வியாபாரம் பாதிக்கப்பட்டால், இவர்களின் பிழைப்பும் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது தானே. அதைத் தான் பிரதமரும் சொல்லி இருக்கிறார் "இந்த பெரும் தொற்று நோயான கொரோனாவால், நடுத்தர, கீழ் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்" எனச் சொல்லி இருக்கிறார். அதோடு ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் கொரோனா வைரஸ் பாதிப்பதாகச் சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி.


Click it and Unblock the Notifications