2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (ஜன.29) பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டம் துவங்கியுள்ளது. எப்போதும் போலவே ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தின் இரு அவைகள் முன்னிலையில் உரையாற்றிப் பட்ஜெட் கூட்டத்தைத் துவங்கி வைத்தார்.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் முன் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 10 வருடத்தில் இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சியை அடையவும், மிகவும் சிறப்பான எதிர்காலம் காத்திருப்பதாக நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.

இதேவேளையில் 2020ஆம் ஆண்டில் கொரோனா வைர்ஸ் தொற்று மற்றும் லாக்டவுன் அறிவிப்பால் ஏற்பட்ட பொருளாதாரத்தை மேம்படுத்த 4 -5 மினி பட்ஜெட் போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. பல துறைகளுக்காகச் சிறப்பு வளர்ச்சி திட்டங்களைப் பல பகுதிகளாக அறிவிக்கப்பட்டது என மோடி தெரிவித்தார்.
இதன் முலம் வர்த்தகச் சந்தை மற்றும் மக்களின் தேவைகளை மத்திய அரசு பூர்த்தி செய்துள்ளது என மோடி தெரிவித்தார். மேலும் இதுபோன்ற மினி பட்ஜெட்டை அறிவிக்கும் திட்டம் தொடர வேண்டும் எனவும் தான் விரும்புவதாகப் பிரதமர் தெரிவித்தார்.
இதேவேளையில் வேலைவாய்ப்புச் சரிவு, பொருளாதார நெருக்கடி மற்றும் விவசாயிகள் போராட்டம் ஆகியவற்றை முன்வைத்து ஜனாதிபதி உரையை 19 எதிர்க் கட்சிகள் இணைந்து புறக்கணிப்பு செய்துள்ளது. இதனால் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் போதே நாடாளுமன்றத்தில் சலசலப்பு நிலவியது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications