இந்தியா டிஜிட்டல் வங்கி சேவையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ள வேளையில் இந்தியாவில் யூபிஐ சேவை, ரூபே கார்டுகள் வெளிநாடுகளுக்குச் செல்லும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய வங்கி துறையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் இந்தியாவில் புதிதாக 75 டிஜிட்டல் வங்கியியல் கிளைகளைப் பிரதமர் மோடி அக்டோபர் 16ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்க உள்ளார்.
மத்திய பட்ஜெட்
2022-23 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவின் 75 ஆண்டுச் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் இந்தியாவில் 75 டிஜிட்டல் வங்கியியல் கிளைகளைத் திறப்பதாக அறிவித்தார்.
பிரதமர் மோடி
இதைத் தொடர்ந்து இந்தியாவின் நிதியியல் சேவை துறையின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக விளங்கப்போகும் பல்வேறு வங்கிகளின் 75 டிஜிட்டல் வங்கியில் கிளை பிரதமர் மோடி விர்ச்சுவல் முறையில் திறந்து வைக்க உள்ளார். இந்த 75 டிஜிட்டல் வங்கியியல் கிளைகளில் ஜம்மு காஷ்மீர் வங்கியின் இரண்டு வங்கி கிளைகளும் அடங்கும் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
டிஜிட்டல் வங்கியியல் கிளை
டிஜிட்டல் வங்கியியல் கிளைகள் மூலம் இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்குகளுக்கும் வங்கி சேவைகளை முழுமையாகக் கொண்டு சேர்க்க முடியும். இது பணப் பரிமாற்றம், முதலீடு, இன்சூரன்ஸ் எனப் பல பிரிவுகளில் இந்தியாவின் சிறு மற்றும் கிராமங்களையும் மேம்படுத்த முடியும்.
75 கிளைகள்
இந்த முக்கியமான திட்டத்தில் தற்போது 11 பொதுத்துறை வங்கிகள், 12 தனியார் வங்கிகள், 1 ஸ்மால் பைனான்ஸ் வங்கி பங்குபெற்று சுமார் 75 டிஜிட்டல் வங்கியியல் கிளைகளைத் திறந்துள்ளது. இந்த டிஜிட்டல் வங்கியியல் கிளைகள் நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் செல்லும் காரணத்தால் பெரும் மாற்றத்தை வங்கி துறையில் விரைவில் பார்க்க முடியும்.
லாபம் சுபம்
இந்த டிஜிட்டல் வங்கியியல் கிளை மூலம் வங்கிகளுக்கு மிகப்பெரிய லாபம் உள்ளது, அதாவது குறைந்த செலவில், குறைவான ஊழியர்கள், கட்டமைப்பு வசதிகள் உடன் முழுமையான வங்கி சேவை கிடைக்கும். இது வங்கிகளுக்கு வாடிக்கையாளர் எண்ணிக்கை, வர்த்தகத்தை அதிகரிக்கப் பெரிய அளவில் பயன்படும், இதேவேளையில் செலவுகளையும் குறைக்கும்.


Click it and Unblock the Notifications