டிசம்பர் 30 ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி 5 வந்தே பாரத் ரயில்கள், 2 அமிர்த பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதில் அமிர்த பாரத் ரயில்கள் புஷ் அண்டு புல் தொழில்நுட்பத்தில் இயக்கப்படும் என்பதால் பயண நேரம் குறைவதோடு சராசரி வேகம் அதிகரிக்கும்.
அதேநாளில் பிரதமர் மோடி அயோத்தியில் புதிய ரயில் நிலையத்தையும் மரியாதை புருஷோத்தம் ஸ்ரீ ராம் விமான நிலையத்தையும் தொடங்கி வைக்கிறார்.

அயோத்தி-ஆனந்த் விஹார், புது தில்லி-வைஷ்ணோ தேவி, அமிர்தசரஸ்-புது தில்லி, ஜல்னா-மும்பை மற்றும் கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரயில்களை டிசம்பர் 30 ஆம் தேதியன்று அயோத்தியில் இருந்து அறிமுகப்படுத்துகிறார். இது தவிர தில்லி- தர்பங்கா, மால்டா- பெஙகளூரு அமிர்த பாரத் ரயில் சேவைகளையும் ஆரம்பித்து வைக்கிறார்.
வேலைக்குச் செல்லும் நபர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இதுவரை 150 அமிர்த பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரயில்கள் உத்தரப்பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், ஒடிசா போன்ற மாநிலங்களை தெலங்கானா, தில்லி, பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசத்துடன் இணைக்கும்.
புஷ் அண்டு புல் டெக்னாலஜியில் இந்த ரயில்கள் இயங்குவதால் ராஜதானி, சதாப்தி ரயில்களைக் காட்டிலும் அதிவேகமாகச் செல்லும்.
எக்ஸ்பிரஸ் ரயில்களைக் காட்டிலும் அமிர்த பாரத் ரயில்களின் கட்டணம் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக இருக்கும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
அயோத்தியை வந்தே பாரத் ரயில்கள் பிற நகரங்களுடன் இணைக்கின்றன. அயோத்தி விமான நிலைய திறப்பு விழா டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெறுகிறது. பயணிகள் விமான சேவை ஜனவரி 5 ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications