பிரதமர் நரேந்திர மோடி நிதி ஆயோக் அமைப்பின் பொருளாதார நிபுணர்களுடன் முக்கியமான கூட்டத்தை நடத்தி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பில் மத்திய அரசு மிகவும் பிசியாக இருக்கும் வேளையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசின் think tank அமைப்பான நிதி ஆயோக்-ன் பொருளாதார நிபுணர்களுடன் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக இந்திய பொருளாதாரம் மற்றும் இந்தியா தற்போது சந்திக்கும் முக்கியமான சவால்களை மதிப்பீடு செய்ததாகத் தெரிகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடர்
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி இடைவேளையுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசு வட்டாரங்கள் கூறப்படுகிறது. இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் இக்கூட்டம் தொடங்கும்.
மக்களவை மற்றும் ராஜ்யசபா
மேலும் நாடாளுமன்றத்தின் சென்டரல் ஹாலில் மக்களவை மற்றும் ராஜ்யசபா கூட்டுக் கூட்டத்தொடரில் திரௌபதி முர்மு உரையுடன் துவங்கும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் திரௌபதி முர்மு ஜனாதிபதி-யாகப் பதவியேற்றிய பின்பு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஆற்றும் முதல் உரை இந்தப் பட்ஜெட் 2023-24.
பொருளாதார ஆய்வறிக்கை
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில், இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கை (Financial bill) தாக்கல் செய்யப்படும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்வார்.
மானிய கோரிக்கைகள்
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 10 ஆம் தேதி வரை தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைவேளைக்குப் பிறகு மத்திய அமைச்சகங்களின் மானிய கோரிக்கைகளை நிலைக்குழுக்கள் ஆய்வு செய்யும். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 6 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி முடிவடையும்.
கடைசி முழுப் பட்ஜெட்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 2வது ஆட்சி காலத்தின் கடைசி முழுப் பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வேளையில் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
பிரதமர் மோடி
பிப்ரவரி 1 ஆம் தேதி மோடி அரசு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்-ஐ தொடர்ந்து 2024 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் இருக்கும் நிலையில் 2024 ஆம் ஆண்டுப் பிப்ரவரி 1 ஆம் தேதி மோடி அரசு இடைக்காலப் பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யும்.
பட்ஜெட் எதிர்பார்ப்பு
இதனால் இந்தப் பட்ஜெட் அறிவிப்புகள் தனிநபர்களுக்குச் சாதகமாக இருக்கும் என அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இருக்கும் வேளையில் இந்தப் பட்ஜெட் எப்படி இருக்கும் என்ற கேள்வி அனைத்து தரப்புக்கும் உள்ளது.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தயாரிப்பதற்கான பணிகளை டிசம்பர் மாதமே துவங்கிவிட்ட நிலையில், சமீபத்தில் அவர் கடந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் திட்டத்தைப் போல இந்தப் பட்ஜெட்டும் அதே உத்வேகத்துடன் இருக்கும் எனத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications