அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரியை விதித்திருக்கிறார். டிரம்பின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை இந்தியாவில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் அதற்கு தண்டனையாக அதிகபட்ச வரியை விதிப்பதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார். இதனால் அமெரிக்கா இந்தியா இடையிலான வர்த்தக உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் திடீரென பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அடுத்த மாதம் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு செல்கிறார்.

ஐநா பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு பயணம் செய்ய இருக்கிறார். நியூயார்க் நகரத்திற்கு செல்லக்கூடிய அவர் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இடையிலான சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக மோதல் நிலவக்கூடிய சூழலில் இந்த மோதலை தணிக்கும் வகையில் இந்த சந்திப்பு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி மாதம் தான் அமெரிக்காவிற்கு சென்றிருந்தார். அப்போது அதிபர் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரதமரின் அமெரிக்க பயணத்துக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . பயணத் திட்டங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது . ஐநா பொதுச்சபையின் 80வது ஆண்டு குழு கூட்டம் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனை அடுத்து 23ஆம் தேதியிலிருந்து 27ஆம் தேதி வரை பொது விவாதம் நடைபெறும். இந்த கூட்டத்தில் 193 ஐநா உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டு சர்வதேச பிரச்சனைகள் குறித்து பேசுவார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஸீ ஜின் பிங்கை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு நரேந்திர மோடி சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இது தவிர ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிற்கு வருகை தர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன . உக்ரைன் விவகாரம், அமெரிக்காவுடன் வர்த்தக மோதல்கள் என பல சர்வதேச பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இந்த சந்திப்புகள் அமையும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
More From GoodReturns

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications