தாமரையில் உலகம்.. வசுதைவ குடும்பகம்.. ஜி20 இந்தியா லோகோ, இணையதளம் வெளியிட்டார் மோடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜி20 மாநாட்டிற்கான லோகோ, தீம், இணையத்தளத்தை அறிமுகம் செய்தார்

 

ஜி20 கூட்டத்திற்கான தலைவர் பதவி என்பது ஒவ்வொரு ஆண்டும் எந்த நாட்டில் ஜி20 மாநாடு நடக்கிறதோ, அந்த நாட்டுக்கு G20 Presidency பதவி தற்காலிகமாக அக்காலகட்டத்திற்கு மட்டும் அளிக்கப்படும்.

அந்த வகையில் இந்தியாவுக்கு டிசம்பர் 1, 2022 முதல் நவம்பர் 30, 2023 வரையில் சுமார் வருட காலத்திற்கு இந்தியாவுக்கு G20 Presidency பதவி கிடைக்க உள்ளது. இந்தியா தலைமையில் சுமார் 200க்கும் அதிகமான மாநாடுகள் இந்தியாவின் முக்கியமான நகரங்களில் நடக்க உள்ளது.

புதிய லோகோ

புதிய லோகோ

இந்தியாவின் ஜி20 கூட்டத்திற்கான லோகோ, தீம் மற்றும் இணையதளத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். லோகோவில் தாமரை மற்றும் 'வசுதைவ குடும்பகம் - ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற சொற்கள் உள்ளது.

வீடியோ கான்பரன்சிங் மூலம் அறிமுக விழாவில் பேசிய பிரதமர், தாமரை நம்பிக்கையின் சின்னம் என்றார் கூறினார்.

உலகம்

உலகம்

உலகம் கடந்த 100 ஆண்டுகளில் பார்த்திடாத மோசமான தொற்று நோய்ப் பாதிப்பையும், மோதல்கள் மற்றும் பல பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றின் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.

தாமரை

தாமரை

இந்த நிலையில் G20 லோகோவில் உள்ள தாமரையின் சின்னம் இந்த காலத்தில் நம்பிக்கையின் பிரதிபலிக்கும். எத்தனை பாதகமான சூழல்கள் வந்தாலும் தாமரை மலரும் என மோடி இக்கூட்டத்தில் பேசினார்.

வசுதைவ குடும்பம்
 

வசுதைவ குடும்பம்

வசுதைவ குடும்பம் அதாவது முழு பூமியும் ஒரு குடும்பம் என்னும் நம்முடைய எண்ணத்தை இந்த லோகோ பிரதிபலிக்கிறது, இதன் காரணமாக இந்தியா எப்போதும் உலகளாவிய நல்லிணக்கத்தை நம்புகிறது என்று பிரதமர் விளக்கினார்.

தாமரை மலர் நமது புராண பாரம்பரியம், நமது ஆஸ்தா (நம்பிக்கை) மற்றும் போதிக்தா (அறிவுத்திறன்) ஆகியவற்றைக் குறிக்கிறது என்று அவர் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இந்தியா ஜி20

இந்தியா ஜி20

இந்தியா ஜி20 மாநாடு நடத்துவதன் மூலம் உலகளாவிய பிரச்சனைகளுக்குச் சர்வதேச அளவில் முக்கியத்துவம் அளிக்கும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது என வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிமுகம் செய்த ஜி20 மாநாட்டிற்கான லோகோ, தீம், இணையத்தளம் மூலம் உலக நாடுகளுக்கு இந்தியாவின் செய்தி மற்றும் முன்னுரிமைகளை விளக்க உள்ளது.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் முக்கியக் கூட்டத்தில் பேசுகையில், ஜி20 கூட்டத்திற்கான தலைவர் பதவி அடுத்த ஆண்டு இந்தியாவுக்குக் கிடைக்கும் நிலையில், இக்கூட்டத்தில் உலகளாவிய கொள்கைகள், வரி விதிப்பு மற்றும் கடன் நெருக்கடி போன்ற முக்கியமான பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் முக்கியத்துவம் அளிக்கப்படும் என அறிவித்தார்.

மோடி

மோடி

நவம்பர் 8 ஆம் தேதி மாலை 4.30க்கு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஜி20 மாநாட்டிற்கான லோகோ, தீம், இணையத்தளத்தை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி. இந்தோனேசியா நாட்டின் பாலி-யில் 2022 ஆம் ஆண்டுக்கான ஜி20 உச்சி மாநாடு நவம்பர் 15, 16 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

முகமது பின் சல்மான்

முகமது பின் சல்மான்

பாலி ஜி20 உச்சி மாநாட்டின் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இக்கூட்டம் துவங்குவதற்கு ஒரு நாள் முன்பு சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியா வருவதாகவும், நரேந்திர மோடியை நேரில் சந்திக்க உள்ளதாகவும் தெரிகிறது.

ஆதிக்கம்

ஆதிக்கம்

G20 நாடுகள் என்பது சாதாரணமான அமைப்பு இல்லை உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவிகிதம், உலகளாவிய வர்த்தகத்தில் 75 சதவிகிதமும், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் கொண்டு உள்ளது.

G20 நாடுகள்

G20 நாடுகள்

G20 நாடுகளின் பட்டியலில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் அடங்கியது.

முக்கிய அமைப்புகள்

முக்கிய அமைப்புகள்

ஒவ்வொரு ஆண்டும் ஜி20 மாநாட்டுக்கு IMF, ஐநா, உலக வங்கி, உலகச் சுகாதார அமைப்பு, உலக வர்த்தக அமைப்பு, OECD, சர்வதேச தொழிலாளர் அமைப்பு போன்ற உலகின் பல முக்கியமான அமைப்புகளும், அதன் உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள்.

ஜி20 2022

ஜி20 2022

இந்தோனேசியா நாட்டின் பாலி நகரத்தில் நடைபெறும் 2022 ஆம் ஆண்டுக்கான ஜி20 உச்சி மாநாடு நவம்பர் 15, 16 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், இக்கூட்டத்தில் குளோபல் ஹெல்த் ஆர்கிக்டசர், டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன், சஸ்டையினபிள் எனர்ஜி டிரான்ஸ்சிஷன் ஆகியவற்றை முக்கியமான விஷயமாகக் கொண்டு ஆலோசனை செய்ய உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM Modi unveiled Vasudhaiva Kutumbakam One Earth, One Family, One Future logo India G20 presidency

PM Modi to unveil logo, theme and website of India's G20 presidency today
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X