டிரம்ப்-க்கு நெத்தியடி கொடுத்த மோடி.. வரி விதிக்கட்டும் பார்த்துக்கலாம்..!!

அமெரிக்கா இந்திய ஏற்றுமதிப் பொருட்கள் மீது கூடுதலாக 25% வரி விதித்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "விவசாயிகளின் நலனில் நான் எந்தவித கலந்தாலோசனையும் செய்ய மாட்டேன். அவசியமானால் அதன் மூலமாய் மிகப்பெரிய விலையையும் செலுத்த தயாராக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இந்தியா ரஷ்யா எண்ணெய் இறக்குமதியை தொடர்ந்து செய்து வந்ததால், இந்திய ஏற்றுமதிப் பொருட்கள் மீது கூடுதலாக 25% வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது. இதன்மூலம், இந்தியா மீதான வரி 50%ஆக அதிகரித்தது. இது அமெரிக்காவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளுக்கு விதிக்கப்பட்ட மிக உயர்ந்த வரிகளில் ஒன்றாகும். இந்த வரி விதிப்பால் இரும்பு, எலக்ட்ரிக்கல் சாதனங்கள், ரசாயனங்கள் போன்ற முக்கிய பொருட்கள் பாதிக்கக்கூடும்.

டிரம்ப்-க்கு நெத்தியடி கொடுத்த மோடி.. வரி விதிக்கட்டும் பார்த்துக்கலாம்..!!

இந்த வரி அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், ஒரு மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, "விவசாயிகளின் நலனில் எந்தவித கலந்தாலோசனையும் செய்ய மாட்டேன். தேவைப்பட்டால், கடுமையான விலையை செலுத்த கூட நான் தயாராக இருக்கேன்" என்று உறுதியளித்தார்.

"எங்களுக்கான மிக முக்கிய முன்னுரிமை விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலனே. இந்தியா, இவர்களின் நலனை ஒருபோதும் கெடுக்காது. இதனால், கடுமையான விலை செலுத்த வேண்டியிருந்தாலும், அதைச் செய்யத் தயாராக உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா ரஷ்யா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்குவதை கண்டித்து, "இந்தியா, ரஷ்யா ஆகியவை இரண்டும் சாகும் நிலைமையில் உள்ள பொருளாதாரங்கள்" என்று விமர்சித்திருந்தார். இந்த நடவடிக்கைகள் மற்றும் பிரதமரின் பதில்கள், இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவுகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா விதித்த 25% கூடுதல் வரியை அடுத்து மோடி அரசு சில முக்கிய சலுகைகள் வழங்கத் தயாராக இருந்ததாக செய்திகள் வெளியானது. அதாவது, அமெரிக்க தொழில்துறைப் பொருட்கள் மீது இந்தியா விதித்து வந்த வரிகளை அகற்றும் முன்மொழிவு, படைவளங்கள் மற்றும் எரிசக்தி வாங்குவதில் அதிகரிப்பு, கார்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை குறைக்கும் பரிந்துரை ஆகியவையும் அரசு முன்வைத்துள்ளது.

ஆனால், இதில் விவசாய மற்றும் பால்துறைப் பொருட்கள் மீது இந்தியா விதித்து வரும் வரிகளை அகற்றும் கோரிக்கையை, மத்திய அரசு தனது "மிகவும் முக்கியமான உள்ளூர் பாதுகாப்பு நிலைப்பாடு" என்பதால் மறுத்துவிட்டது. அமெரிக்கா, இந்தியா போன்ற பெரிய சந்தையில் தன் விவசாய மற்றும் பால்துறைப் பொருட்களுக்கு அதிக அணுகலை எதிர்பார்க்கிறது. ஆனால் இந்தியா, தன் உள்ளூர் விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அமெரிக்கா, இந்திய ஏற்றுமதிகளுக்கு 25% கூடுதல் வரி விதித்ததற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "இது தவறானது, நியாயமற்றது மற்றும் எந்த அடிப்படையும் இல்லாதது" என்று கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், "இந்தியாவின் ரஷ்யா எண்ணெய் இறக்குமதி என்பது, 140 கோடி மக்களுக்கான சக்தி தேவையை பூர்த்தி செய்யும் தேசிய நோக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த எண்ணெய் இறக்குமதியை பல நாடுகள் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றன. எனவே, இந்தியாவை மட்டும் குறிவைத்து, தண்டனை நடவடிக்கை எடுப்பது ஒரு பாரபட்சமான முடிவாகும்" என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு விதித்த புதிய வரி உயர்வால், தொழிலாளர்கள் சார்ந்த ஏற்றுமதி துறைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க, ஐரோப்பிய ஒன்றியம், பெரு, சிலி போன்ற நாடுகளுடன் ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+