மோடி - ஜி ஜின்பிங் SCO மாநாடு: கொரோனாவுக்கு பின்பு நடக்கும் விமான சேவை.. சீனா - இந்தியா மாஸ்..!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் ஆகஸ்ட் 31, 2025, ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி இந்திய நேரத்தில் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு (SCO) ஒரு பகுதியாக நடைபெறவுள்ளது, இந்த மாநாடு டியான்ஜின் நகரில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறவுள்ளது.
பிரதமர் மோடி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீனா பயணம் செய்துள்ளார். இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்தும் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது, இதனால் பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக டிரம்ப் வரி விதிப்புக்கு பின்பு மோடி - ஜி ஜின்பிங் - விளாடிமீப் புடின் ஆகியோர் ஓரே கூட்டத்தில் சந்திக்க உள்ளனர். இதனால் இக்கூட்டம் பிரிக்ஸ் கூட்டத்திற்கு பெரும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை, ஆகஸ்ட் 30, 2025 அன்று, வட சீனாவில் இருக்கும் டியான்ஜின் பகுதிக்கு ஜப்பான் சுற்று பயணத்தை முடித்துக்கொண்டு வந்தடைந்தார்.
எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி செய்த பதிவில் "சீனாவில் இருக்கும் டியான்ஜின்-ல் இறங்கியுள்ளேன். SCO மாநாட்டின் ஆழமான விவாதங்களை எதிர்நோக்கி, பல உலகத் தலைவர்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்," என்று அவர் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியின் இந்த சீன பயணம், ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை இருக்கும்.
இது, கடந்த 10 மாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் இரண்டாவது சந்திப்பாகும். கடந்த முறை, ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற BRICS மாநாட்டில் சந்தித்தனர். இன்றைய சந்திப்பு, 40 நிமிடங்கள் நீடிக்கும் என திட்டமிடப்பட்டுள்ளது, இது டிரம்ப் வரி விதிப்புக்கு பின்பு நடக்கும் சந்திப்பு என்பதால் இது முக்கியமான சந்திப்பாக மாறியுள்ளது, இரு நாடுகளுக்கும் இடையே உறவுகளில் புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Aug 31, 2025, 3:46 pm IST
SCO மாநாடு: ஜி ஜின்பிங் மாலத்தீவு அதிபர் சந்திப்பு
சீன டியான்ஜினில் SCO மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு-வை சந்தித்தார். PTI செய்தி நிறுவனம் அறிவித்தபடி, FTA ஒப்பந்தத்தை சிறப்பாக செயல்படுத்தி இருதரப்பு உறவை ஆழப்படுத்த வேண்டும் என்று கோரினார்.
Aug 31, 2025, 3:46 pm IST
ஜி ஜின்பிங்கை 2026 BRICS மாநாட்டிற்கு அழைத்த மோடி
வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பிரதமர் நரேந்திர மோடி 2026-ல் இந்தியா நடத்தவுள்ள BRICS மாநாட்டிற்கு சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை அழைத்தார். சி ஜின்பிங் மோடியின் அழைப்புக்கு நன்றி தெரிவித்து, இந்தியாவின் BRICS தலைமைக்கு ஆதரவு தெரிவித்தார்.
Aug 31, 2025, 3:46 pm IST
SCO மாநாடு: ஐநா தலைவர் வருகை
SCO மாநாட்டிற்கு முன்பாக, ஐநா செயலாளர் ஜெனரல் அண்டோனியோ குட்டரெஸ் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சனிக்கிழமை சந்தித்தனர். சின்ஹூவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் படி, இந்த சந்திப்பில் அவர்கள் இன்றைய உலக சவால்களுக்கு பன்முகத் தன்மை மற்றும் ஒத்துழைப்பு தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
Aug 31, 2025, 3:45 pm IST
SCO மாநாடு நேரடி: இந்தியா, சீனா நேரடி விமானங்களை மீண்டும் தொடங்க உடன்பாடு
SCO மாநாட்டில், இந்தியா மற்றும் சீனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு முதல்முறையாக நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளன, இது இரு நாடுகளின் உறவுகளில் மெல்லிய மாற்றத்தை காட்டுகிறது. உலக வர்த்தகத்தில் உள்ள தடுமாற்றங்களுக்கு நடுவே இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இது பயணிகள் மற்றும் வணிகர்களுக்கு பயனளிக்கும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Aug 31, 2025, 3:45 pm IST
மோடி - மியான்மார் தலைவர் சந்திப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் மியான்மார் குடியரசின் மூத்த பொது மேலாளர் மின் ஆங் ஹ்லெய்ன்கை சந்தித்தார். இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பொருளாதார மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, பிராந்திய அமைதி மற்றும் வணிக வளர்ச்சிக்கு புதிய பாதையை உருவாக்கும் வாய்ப்பாக அமையலாம்.
Aug 31, 2025, 12:52 pm IST
SCO மாநாடு: பிரிக்ஸ் நாடுகளின் பலம்
சீனா நாட்டின், டியான்ஜினில் SCO மாநாட்டில் பங்கேற்க வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அரசு நிறுவனமான சின்ஹூவா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ரஷ்யா மற்றும் சீனா பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் "வேறுபாடுகள் உடன் வரும் மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைக்கு" எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளன என்று கூறினார்.
Aug 31, 2025, 12:52 pm IST
SCO மாநாடு: மோடி - CCP செயலாளர் காய் கியுடன் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் காய் கியை (Cai Qi) சந்தித்து, இந்தியா மற்றும் சீனா இடையேயான பரஸ்பர நலன் மற்றும் ஒத்துழைப்பு விஷயங்களை விவாதித்தார். இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை மேம்படுத்துவதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Aug 31, 2025, 12:51 pm IST
சீன-ரஷ்ய உறவு
சீன அரசு செய்தி நிறுவனமான CCTV வெளியிட்ட தகவல்களின்படி, சீனா மற்றும் ரஷ்யா இடையேயான உறவு தற்போது வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறந்த நிலையில் உள்ளது. இந்த உறவு பெரு நாடுகளிடையேயான மிகவும் நிலையானதாகவும், முக்கியமானதாக உள்ளதாக கூறப்படுகிறது என தெரிவித்துள்ளது.
Aug 31, 2025, 12:51 pm IST
SCO மாநாடு: விளாடிமிர் புடின்-க்கு சீனாவில் ராஜ மரியாதை
ரஷ்ய அதிபர் புடின் சீனாவுக்கு ஞாயிறு மதியம் 12:50 மணிக்கு வந்தடைந்தார், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சீனாவுக்கு நான்கு நாள் பயணமாக வந்துள்ளார். சுமார் 20 உலகத் தலைவர்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டிற்காக கூடியுள்ள நிலையில், புதினை சீனாவின் உயர்மட்ட அதிகாரிகள் வரவேற்றனர். இந்த பயணம், சர்வதேச பொருளாதார மற்றும் பாதுகாப்பு விவாதங்களுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Aug 31, 2025, 11:00 am IST
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இடையேயான இருதரப்பு சந்திப்பு டியான்ஜின், சீனாவில் நடைபெற்று முடிந்துள்ளது.
Aug 31, 2025, 10:54 am IST
SCO மாநாடு: ஜி ஜின்பிங்-ன் தொடக்க உரை
சீனாவில் பிரதமர் நரேந்திர மோடி உடனான பேச்சுவார்த்தையின் தொடக்க உரையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசிய போது, "உலகம் பெரும் மாற்றத்தை நோக்கி செல்கிறது. சீனா மற்றும் இந்தியா உலகில் அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட நாடுகளாகவும், உலகின் தெற்கு பகுதியின் (Global South) முக்கிய உறுப்பினர்களாகவும் உள்ளோம்" என்று கூறினார்.
Aug 31, 2025, 10:39 am IST
கசான் சந்திப்பு மற்றும் எல்லை அமைதி
மேலும், மோடி பேசுகையில், "கடந்த ஆண்டு ரஷ்யாவின் கசானில் நாம் மிகவும் முக்கியமான விவாதங்களை நடத்தினோம், இது நமது உறவுகளுக்கு பாசிடிவ் ஆன சூழ்நிலையை உருவாக்கியது. எல்லையில் பிரிவினையை தொடர்ந்து அமைதி மற்றும் நிலைத்தன்மையின் சூழல் உருவாகியுள்ளது." இந்த முன்னேற்றம், எல்லை பிரச்சினைகளை தீர்த்து, இரு நாடுகளுக்கும் இடையே நல்ல உறவை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
Aug 31, 2025, 10:39 am IST
இந்தியா - சீனா: எல்லை மேலாண்மை மற்றும் ஒத்துழைப்பு
ஜி ஜின்பிங் உடனான சந்திப்பின்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி "இரு நாட்டு சிறப்பு பிரதிநிதிகள் எல்லை மேலாண்மை குறித்து ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளனர். கைலாஷ் மனசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நேரடி விமான சேவைகளும் மீண்டும் துவங்கப்பட உள்ளது. இரு நாடுகளின் 2.8 பில்லியன் மக்களின் நலன்கள் நமது ஒத்துழைப்போடு இணைந்துள்ளன. இது மனித குலத்தின் முழு நலனுக்கும் வழி காட்டும். நாங்கள் பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் உணர்வோடு உறவை முன்னெடுக்க கடமைப்பட்டுள்ளோம்." என மோடி பேசினார்.
Aug 31, 2025, 10:39 am IST
மோடியின்: SCO தலைமைக்கு வாழ்த்து
சீனாவின் டியான்ஜினில் நடைபெற்ற இந்தியா - சீனா இருதரப்பு சந்திப்பின்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பாராட்டினார். "நீங்கள் SCO-இன் வெற்றிகரமான தலைமையை மேற்கொண்டதற்கு என் வாழ்த்துக்கள். சீனாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்ததற்கும், இன்றைய சந்திப்புக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்," என்று அவர் கூறினார்.
Aug 31, 2025, 10:38 am IST
SCO மாநாடு: நேபாள பிரதமர் இந்திய-சீன லிபுலெக் வர்த்தக பாதை
சனிக்கிழமை, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின்போது, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, இந்தியா மற்றும் சீனா லிபுலெக் பாஸை வர்த்தக பாதையாக பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்று PTI தெரிவித்துள்ளது.
நேபாளம் லிபுலெக் நேபாளத்திற்கு சொந்தமான பகுதி என்று கூறினார், ஆனால் இந்தியா இதை "நியாயமற்றது மற்றும் வரலாற்று உண்மைகள் அல்லது ஆதாரங்களை அடிப்படையாக இல்லாதது" என்று திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இந்த விவகாரம் பிராந்திய உறவுகளில் புதிய சவாலை உருவாக்கியுள்ளது.
Aug 31, 2025, 10:38 am IST
சீன தூதர் டிரம்ப் மீதான கருத்து
இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவுக்கான சீன தூதர் Xu Feihong, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் காரணமாக 25 சதவீதம் கூடுதல் வரியை விதித்ததற்கு கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் மொத்தம் 50 சதவீதமாக உயர்ந்தது. டிரம்பை "Bullu" என்று கூறி அவர் கடுமையாக கிண்டல் செய்தார். "புல்லிக்கு ஒரு அங்குல கொடுத்தால், ஒரு மைல் எடுத்துக்குவார்," என்று விமர்சனம் செய்தார்.
Aug 31, 2025, 10:19 am IST
SCO மாநாட்டில் மோடி முன்வைத்து முக்கியமான விஷயங்கள்
Aug 31, 2025, 10:16 am IST
மோடி- ஜி ஜின்பிங் தலைமையில் இந்தியா - சீனா மத்தியிலான கூட்டம் துவங்கியது.
Aug 31, 2025, 10:11 am IST
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு துவங்கியது - மாநாட்டு ஏற்பாடுகளின் வீடியோ
Aug 31, 2025, 10:07 am IST
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு
SCO மாநாட்டிற்கு மாலத்தீவு அதிபர் முகமது முய்சு வந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் அவருக்கு வரவேற்பு அளித்துள்ளார்.
Aug 31, 2025, 10:05 am IST
SCO மாநாடு 2025: ஐந்தாவது முறை
இந்த ஆண்டு நடைபெறும் SCO மாநாடு ஒரு மைல்கல் நிகழ்வாகும், இது சீனா ஐந்தாவது முறையாக நடத்தும் கூட்டமாகும். SCO தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை நடைபெறும் மிகப்பெரிய கூட்டமாக அமையும்.
20க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்களும், 10 சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும் இந்த வரலாற்று மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இது உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது.
Aug 31, 2025, 10:05 am IST
புதிய வர்த்தக பாதை:
இந்தியாவுக்கு இந்த SCO மாநாடு ஒரு முக்கிய தளமாக விளங்குகிறது, பிராந்திய ஈடுபாட்டை மட்டுமல்லாமல், உலகளாவிய எரிசக்தி மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும் முக்கிய வாய்ப்பையும் தருகிறது. இது இந்திய பொருளாதாரத்திற்கு புதிய திசையை காட்டும்.
Aug 31, 2025, 10:05 am IST
மாநாடு ஏன் முக்கியமானது?
இந்த மாநாடு நடக்கும் நேரம் மிகவும் முக்கியமானது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரியை விதித்து வெறும் மூன்று வாரங்களே ஆன நிலையில் இது நடைபெறுகிறது. இதில் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதற்காக 25 சதவீதம் கூடுதல் வரி அடங்கும்.
Aug 31, 2025, 10:05 am IST
முக்கிய இருதரப்பு சந்திப்புகள்
SCO மாநாட்டின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜீ ஜின்பிங் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்கும் எதிர்பார்ப்பும் உள்ளது. இந்த சந்திப்புகளுடன், மோடி SCO-யின் முக்கிய விவாதங்களிலும் பங்கேற்கிறார். 2020-ல் ஏற்பட்ட கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, மோடியின் இந்த சீனா பயணம் முதலாவது என்பதால் இந்த சந்திப்பு முக்கியதுவம் பெறுகிறது.
Aug 31, 2025, 9:41 am IST
SCO மாநாடு 2025: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் 10 உறுப்பு நாடுகள் உள்ளன.
சீனா, இந்தியாவுடன் சேர்ந்து பெலாரஸ், ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை இதில் அடங்கும்.
Aug 31, 2025, 8:57 am IST
இந்த சந்திப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்த விவாதங்களுக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது. இதன் மூலம், உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Aug 31, 2025, 8:57 am IST
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மோடியின் சீனா பயணம், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பன்முக தொடர்புகளை வலுப்படுத்தும் வாய்ப்பை வழங்குகிறது.
Aug 31, 2025, 8:57 am IST
இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவுகள் எல்லை பகுதியில் நடைபெற்ற ராணுவ அதிகாரிகள் மத்தியிலான தாக்குதலுக்கு பின்பு கடந்த ஒரு வருடத்தில் சுமூகமடைந்து வருகின்றன. இந்த சந்திப்பு இந்தியா சீநா மத்தியிலான நட்புறவுக்கு புதிய அடித்தளம் அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Aug 31, 2025, 8:57 am IST
இந்த SCO மாநாடு, பன்னாட்டு அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் புதிய பாதையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டிரம்ப் வரி விதிப்புக்கு பின்பு நடக்கும் கூட்டம் என்பதால் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.
Aug 31, 2025, 8:57 am IST
SCO மாநாடு ஆக்ஸ்ட் 31ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 1 வரை நீடிக்கும், இதைத் தொடர்ந்து பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள உலக போர் II முடிவின் 80வது ஆண்டு நினைவாக பெரிய ராணுவ அணி வகுப்பு நடைபெறவுள்ளது.
Aug 31, 2025, 8:57 am IST
இந்த SCO மாநாட்டை ஜி ஜின்பிங் நடத்தவுள்ளார், இதில் சுமார் 20 உலகத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். SCO மாநாடு, உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் முக்கிய நிகழ்வாகும்.
Aug 31, 2025, 8:57 am IST
ஞாயிற்றுக்கிழமை, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் டியான்ஜின் நகருக்கு வந்தடைந்தாக ரஷ்ய அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
Share This Article
English summary
PM Modi-Xi Jinping Meet in China: SCO Summit Live Updates
Prime Minister Narendra Modi is in China for the Shanghai Cooperation Organisation (SCO) summit, marking his first visit in seven years and the second meeting with President Xi Jinping in under a year. The high-level talks, scheduled for Sunday, aim to build on a recent thaw in India-China relations. With a focus on stability amid global economic shifts and a backdrop of past border tensions, the discussions are expected to shape the future of diplomatic and economic ties. This live blog provides real-time updates and expert analysis from the Tianjin summit.
Story first published: Sunday, August 31, 2025, 8:52 [IST]