78வது சுதந்திர தினத்தையொட்டி இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் இந்தியாவின் வளர்ச்சியை வடிவமைத்தல், இன்னோவேஷனுக்கு முக்கியத்துவம் மற்றும் பல்வேறு துறைகளில் நாட்டை உலகின் முன்னோடியாக உயர்த்தும் நோக்குடன் எதிர்கால திட்டங்களையும், இலக்குகளையும் மோடி அறிவித்தார்.
பிரதமர் மோடி உரையில் பேசிய முக்கியமான விஷயங்களின் தொகுப்பைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம். மோடி உரையில் நடுத்தர மக்கள், வேலைவாய்ப்பு, இன்னோவேஷன் எனப் பல விஷயங்களைக் குறித்துப் பேசியுள்ளார்.

1. ஈஸ் ஆஃப் லிவிங் மிஷன்: நாட்டு மக்கள் 'எளிதாக வாழ்வதை' நிறைவேற்றுவதற்கான தனது பார்வையைப் பிரதமர் மோடி சுதந்திர தின பேச்சில் முன்வைத்தார். நாட்டின் நகரபுறத்தில் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் முறையாக மதிப்பீடு செய்து மேம்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என மோடி பேசினார்.
2. நாளந்தா மறுமலர்ச்சி: இந்தியாவில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியாவை உலகளாவிய கல்வி மையமாக நிலைநிறுத்தி, பண்டைய நாளந்தா பல்கலைக்கழக உணர்வைப் புதுப்பிக்கப் பிரதமர் முயல்வதாகக் கூறியுள்ளார். இது 2024 இல் நாலந்தா பல்கலைக்கழகத்தின் திறப்பு விழாவை அடிப்படையாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
3. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர் சிப் உற்பத்தி: இந்தியாவின் செமிகண்டக்டர் சிப் பயன்பாட்டில் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, இத்துறையில் தொழில்நுட்பத் தன்னிறைவைப் பெறப்படுவதை நோக்கமாகக் கொண்டு, செமிகண்டக்டர் உற்பத்தியில் உலக அளவில் முன்னணியில் இருப்பதற்கான முயற்சிகள் எடுப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டைக் குறித்து பிரதமர் மோடி பேசினார்.
4. ஸ்கில் இந்தியா: 2024 பட்ஜெட்டைக் குறிப்பிடுகையில், இந்தியாவின் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கும், உலகின் திறன் தலைநகரமாக மாறுவதற்கும் அரசாங்கம் அறிவித்த முக்கிய முயற்சிகளைப் பிரதமர் பேசினார்.
5. தொழில்துறை உற்பத்தி மையம்: இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதும், இந்தியாவில் இருக்கும் வளங்கள் மற்றும் திறமையான பணியாளர்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பிரதமர் மோடி பேசினார்.
6. "டிசைன் இன் இந்தியா, டிசைன் பார் தீ வோர்ல்டு": பிரதமர் உள்நாட்டு டிசைன் திறன்களை உயர்த்த வேண்டும் என்பதை மையப்படுத்தி, இந்த வாக்கியத்தை உருவாக்கிப் பேசியுள்ளார். இந்தியாவில் டிசைன் செய்யப்பட்ட பொருட்களை உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய வலியுறுத்தினார்.
7. குளோபல் கேமிங் சந்தையில் இந்தியா: இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தையும் இலக்கியத்தையும் மையப்படுத்தி, இந்தியாவில் கேம்களை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். இந்திய தொழில் வல்லுநர்கள் உலக கேமிங் சந்தையை வழிநடத்த வேண்டும், விளையாடுவதில் மட்டுமல்ல, கேம்களை தயாரிப்பதிலும் இந்திய விளையாட்டுகள் உலகளவில் தனி அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.
8. கிரீன் ஜாப்ஸ் மற்றும் கிரீன் ஹைட்ரஜன் மிஷன்: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியாவின் முயற்சிகளில் பசுமை வேலைகளின் முக்கியத்துவமாக உள்ளது என்று பிரதமர் மோடி பேசினார். நாட்டின் கவனம் இப்போது பசுமை வளர்ச்சி மற்றும் பசுமை வேலைகள் மீது உள்ளது, இது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குப் பங்களிக்கும் போது இத்துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.
கிரீன் ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளில் நிலையான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான உலகளாவிய முன்னணியில் இந்தியா இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
9. ஸ்வஸ்த் பாரத் மிஷன்: விக்சித் பாரத் 2047 இன் இலக்கை அடைய, ராஷ்ட்ரிய போஷன் அபியான் திட்டத்தை தொடங்கப்பட்டதன் மூலம் 'ஸ்வஸ்த் பாரத்' பாதையில் இந்தியா செல்ல வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
10. மாநில அளவிலான முதலீட்டுப் போட்டி: முதலீடுகளை ஈர்ப்பதற்கும், நல்ல நிர்வாகத்திற்கான உத்தரவாதங்களை வழங்குவதற்கும், சட்டம் ஒழுங்கை உறுதி செய்வதற்கும் தெளிவான கொள்கைகளை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.
11. காலநிலை மாற்ற இலக்குகள்: 2030-க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை அடைவதற்கான இந்தியாவின் இலக்கை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். G20 நாடுகளில் அதன் பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை எட்டிய ஒரே நாடு இந்தியா தான் என்று அவர் குறிப்பிட்டார்.
12. மருத்துவக் கல்வி விரிவாக்கம்: அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 புதிய மருத்துவ கல்விக்கான இட சேர்க்கும் திட்டத்தைப் பிரதமர் மோடி அறிவித்தார், இது நாட்டின் மருத்துவக் கல்வித் திறனை மேம்படுத்தவும், சுகாதார நிபுணர்களுக்கான வளர்ந்து வரும் தேவையை நிவர்த்தி செய்யவும் நோக்கமாக உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications