உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர் தான் பிரதமர் நரேந்திர மோடி. தொடர்ந்து மூன்று முறை இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் , தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சராகவும் பிரதமராகவும் அரசின் தலைமை பொறுப்பில் இருப்பவர் என பல்வேறு சாதனைகளுக்கும் சொந்தக்காரராக இருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இத்தனை ஆண்டுகள் அரசியல் வாழ்க்கையில இருக்கிறார் ஆனால் அவருக்கென சொந்தமாக கார், நிலம் கூட இல்லை. பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது பிறந்தநாளான இன்று அவருக்கு பிரதமர் பதவியின் மூலம் கிடைக்கக்கூடிய சம்பளம் எவ்வளவு, அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு என்பன உள்ளிட்ட விவரங்களை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் பிரதமராக பதவி வகித்த வருபவர் தான் நரேந்திர மோடி . அதற்கு முன்னர் குஜராத் மாநில முதலமைச்சராக பதவி வகித்தார். தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தலைமை பொறுப்புகளில் இருக்கிறார் நரேந்திர மோடி. இவருடைய சொத்து மதிப்பு 3 கோடி ரூபாய் தான். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய சொத்து மதிப்பு விவரங்களை வெளியிட்டு இருந்தார் .
இதன்படி அவருடைய சொத்து மதிப்பு 3 கோடியே 2 லட்சம் ரூபாய் தான். நரேந்திர மோடி தன்னுடைய சொத்தில் பெரும்பாலான பணத்தை வங்கியில் தான் டெபாசிட் செய்து வைத்திருக்கிறார். அதன் மூலம் வட்டியாகவே அவருக்கு பல லட்சங்கள் வருகின்றன. நரேந்திர மோடி எஸ்பிஐ வங்கியில் 2 கோடியே 86 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்திருக்கிறார் . இது அவருக்கு கணிசமான அளவு வட்டி வருமானத்தை கொடுக்கிறது.

நரேந்திர மோடி சொந்தமாக எந்த பத்திரங்களிலும் முதலீடு செய்யவில்லை, பங்கு சந்தையிலும் முதலீடு செய்யவில்லை . 9 லட்சம் ரூபாய் பணத்தை தேசிய சேமிப்பு பத்திரங்கள் திட்டத்தில் முதலீடு செய்துள்ளார். மோடிக்கு என சொந்தமாக கார் கூட இல்லை, இவர் யாருக்கும் கடன் கொடுத்தது கிடையாது , இவர் திரும்ப செலுத்த வேண்டிய கடனும் எதுவும் இல்லை. மோடி சொந்தமாக நாலு தங்க மோதிரங்களை வைத்திருக்கிறார். 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி இவற்றின் மதிப்பு 2 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் . மோடி சொந்தமாக அசையா சொத்துக்கள் எதையும் கொண்டிருக்கவில்லை.
25 ஆண்டு காலம் ஆட்சி பொறுப்பில் இருக்கும் இவருக்கு சொந்தமாக நிலம் கிடையாது, வீடு இல்லை , கார் கூட இல்லை. நரேந்திர மோடியின் பெரும்பாலான வருமானம் பிரதமர் பதவியின் மூலம் வரும் சம்பளம் மற்றும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தின் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் ஆகும். நரேந்திர மோடி பிரதமர் பதவியின் மூலம் மாதம் 1.6 லட்சம் ரூபாயை சம்பளமாக பெறுகிறார் . இது தவிர அவருக்கு பார்லிமென்ட் அலோவென்ஸ் 45 ,000 ரூபாய் , எக்ஸ்பென்ஸ் அலோவென்ஸ் 3,000 ரூபாய், டெய்லி அளவென்ஸ் 2,000 ரூபாய் மாதம் தோறும் வழங்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications