பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் பொருளாதாரத்தைச் சரிவு பாதையில் இருந்து வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் மிகவும் முக்கியமான கருவியாக விளங்கும் பட்ஜெட் அறிக்கையைப் பல சவால்களுக்கு மத்தியில் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது.
இந்தப் பட்ஜெட்டில் மோடி அரசு $200 பில்லியன் Vs $200 மில்லியன் ஆகிய இரு முக்கியப் பிரச்சனைகளில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க உள்ளது என்பதைப் பிப்ரவரி 1ஆம் தேதி தான் பார்க்க முடியும்.
சரி அது என்ன $200 பில்லியன், $200 மில்லியன் பிரச்சனை..!
$200 பில்லியன் Vs $200 மில்லியன்
இந்தியாவில் அதிகரித்து வரும் பணிவீக்கம், உலக நாடுகள் உயர்த்தி வரும் வட்டி விகிதம் ஆகியவற்றின் மூலம் மத்திய அரசு பட்ஜெட் பற்றாக்குறை 200 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 2வது கடந்த சில வருடத்தில் இந்திய சந்தையில் உருவாக்க முடியாத, காணாமல் போன நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான 200 மில்லியன் வேலைவாய்ப்புகள் தான்.
கொரோனா தொற்றுப் பாதிப்பு
2 வருடமாகக் கொரோனா தொற்றுப் பாதிப்பு இந்தியாவின் உற்பத்தித் துறை, வகைப்படுத்தாத துறை வர்த்தகத்தைப் பெரிய அளவில் பாதித்துள்ளது. இதற்கிடையில் மத்திய அரசும் சரி, மக்களுக்கும் சரி ஹெல்த்கேர் சேவைக்காக அதிகப்படியான செலவுகளைச் செய்துள்ளது. லாக்டவுன், கொரோனா தொற்றுக்கு மத்தியில் வேலைவாய்ப்பு வருமானத்தை இழந்து தவிக்கும் போது ஹெல்த்கேர் செலவு என்பது பெரும் சுமை.
80 - 90% வேலைவாய்ப்பு
உற்பத்தி மற்றும் வகைப்படுத்தாத துறை தான் இந்தியாவில் 80 - 90 சதவீத வேலைவாய்ப்பு சந்தையை ஆதிக்கம் செய்யும் நிலையில், சேவை துறையில் பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணியாற்ற துவங்கிய காரணத்தால் கொரோனா காலப் பாதிப்பில் இருந்து கிட்டதட்ட 100 சதவீதம் மீண்டு வளர்ச்சி பாதையை நோக்கி செல்ல துவங்கியுள்ளது.
வேலைவாய்ப்பு - மக்கள் தொகை குறியீடு
உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவின் வேலைவாய்ப்பு - மக்கள் தொகை குறியீடு 600 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்புச் சந்தையில் இருக்க வேண்டும், ஆனால் தற்போது 400 மில்லியன் ஊழியர்கள் மட்டுமே வேலைவாய்ப்புச் சந்தையில் இருக்கின்றனர்.
வகைப்படுத்தாத துறைக்குப் பாதிப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு சந்தையை மீட்டு எடுக்கப் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது, இது வகைப்படுத்தப்பட்ட துறைகள் பெரிய அளவில் உதவினாலும், அதிக ஊழியர்களைக் கொண்டு இருக்கும் வகைப்படுத்தாத துறைக்குப் பயனடையவில்லை.
உற்பத்தி விலை பணவீக்கம்
இதேவேளையில் இந்தியாவில் உற்பத்தி விலை பணவீக்கம் 30 வருட உச்சத்தில் இருக்கும் காரணத்தால் இந்த ஆண்டு மத்திய அரசு வெளியிடும் பட்ஜெட் அறிக்கையில் 200 பில்லியன் டாலர் அல்லது 15 லட்சம் கோடி ரூபாய் அல்லது 6.5 சதவீத ஜிடிபி தான் நடப்பு ஆண்டின் நிதி பற்றாக்குறையாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
பட்ஜெட் பற்றாக்குறை
இந்தப் பட்ஜெட் பற்றாக்குறை மத்திய அரசின் அதிகப்படியான செலவுகள், வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கான அறிவிப்புகள், கட்டுமான திட்டங்கள் ஆகியவற்றுக்கான செலவுகள் அதிகரித்துள்ளதன் மூலம் பட்ஜெட் பற்றாக்குறை 200 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications