இந்திய மக்களும், தொழிற்துறையினரும் அதிகம் எதிர்பார்த்த வாஷிங்டனில் உள்ள பிளேர் ஹவுஸில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் இடையேயான இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பை தொடர்ந்து அமெரிக்கப் பங்குச்சந்தையில் டெஸ்லா பங்குகள் 6 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. அமெரிக்க நேரப்படி மதியம் 1.35 மணிக்கு டெஸ்லா பங்குகள் 4.59 சதவீதம் உயர்ந்து 351.86 டாலராக உயர்ந்துள்ளது.

டெக் பில்லியனரும், அமெரிக்க அதிபரின் நெருங்கிய விசுவாசியாக மாறியுள்ள எலன் மஸ்க், வியாழக்கிழமை அன்று நரேந்திர மோடியை பிளேயர் மாளிகையில் சந்திப்பதற்காகத் தனது குழந்தைகள் உடன் வந்து அசத்தினார். சமீப காலமாக எலான் மஸ்க் அனைத்து முக்கிய இடங்களுக்கும் தனகு குழந்தைகளை அழைத்துச் செல்கிறார்.
நேற்று டிரம்ப் மற்றும் செய்தியாளர்களை ஓவல் அலுவலகத்தில் சந்திக்க எலான் மஸ்க் சென்றிருந்த போதும் மஸ்க்-ன் தோலில் தன் மகனை உட்கார வைத்துப் பேசிக்கொண்டு இருந்தார். அருகில் டிரம்ப் உட்கார்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மோடி - எலான் மஸ்க் மத்தியிலான பேச்சுவார்த்தையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வேண்டிய ஸ்டார்லிங்க் இன்னும் நிலுவையில் உள்ள உரிமத்தின் ஒப்புதலில் கவனம் செலுத்து அழுத்தம் கொடுக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதோடு வருடக்கணக்கில் பேசப்பட்டு வரும் டெஸ்லா எலக்ட்ரிக் வாகனங்கள் (EV கள்) மீதான கட்டணக் குறைப்பு மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (ISRO) SpaceX இணைந்து பணியாற்றுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கும்.
எலான் மஸ்க்-ஐ சந்தித்த பின்பு நரேந்திர மோடி X தளத்தில் "வாஷிங்டன் DC இல் எலான் மஸ்க் உடன் சிறப்பான சந்திப்பு ஏற்பட்டது. விண்வெளி, மொபிலிட்டி, தொழில்நுட்பம் மற்றும் இன்னோவேஷன் போன்ற பல்வேறு விஷயங்களை நாங்கள் விவாதித்தோம். சீர்திருத்தம் மற்றும் 'குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி' ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகள் குறித்து நான் பேசினேன் என்று பதிவிட்டு இருந்தார்.
எலான் மஸ்க்-ஐ சந்திக்கும் முன்பு நரேந்திர மோடி, அமெரிக்க அரசியலில் கடந்த ஒரு வருடத்தில் அதிகம் பேசப்பட்ட விவேக் ராமசாமியை சந்தித்தார். வாஷிங்டன் டிசியில் உள்ள பிளேர் மாளிகையில் தான் இவர்களுக்கான சந்திப்பும் நடந்தது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications