பிரதமர் நரேந்திர மோடி சொத்து மற்றும் கடன்கள் பற்றிய தன்னார்வ அறிவிப்பின் படி இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையில் அவரிடம் எவ்வளவு பணம், சொத்துக்கள் இருக்கிறது என்பது பிஎம் இந்தியா இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், பிரதமர் மற்றும் அனைத்து மத்திய அமைச்சர்களும் பொது வாழ்வில் தங்களுடைய பொறுப்புக்களை கடைப்பிடிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தாங்களாக முன்வந்து அவர்களுடைய சொத்துக்கள், கடன்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் மற்றும் கடன்களை முன்வந்து அறிவிப்பார்கள்.

இந்த முறையை அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், தாங்களாக முன்வந்து அவர்களுடைய சொத்துக்கள், கடன்கள் குறித்த தகவல்களை அறிவிக்கும் பழக்கம் தொடங்கியது. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களை தொடர்ந்து அனைவரும் இதை பின்பற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தானாக முன்வந்து தாக்கல் செய்துள்ள சொத்துக்கள், கடன்கள் குறித்த தகவல்கள் படி பல முக்கியமான விஷயங்கள் தெரிய வந்துள்ளது. ஆம், 73 வயதான பிரதமர் நரேந்திர மோடி பெயரில் ஒரு ஆயுள் காப்பீட்டுக் கொள்கை இல்லை, பிரதமரின் வங்கி கணக்கின் இருப்பு வெறும் 574 ரூபாய் என பல வியப்பளிக்கும் விஷயங்கள் தெரிய வந்துள்ளது.
இந்த சொத்து விபரங்கள் அனைத்தும் மார்ச் 31, 2023 ஆம் தேதி முடிவில் திரட்டப்பட்ட தரவுகள். பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே இன்சூரன்ஸ் திட்டத்தை வைத்திருந்த நிலையில், இது முதிர்ச்சி அடைந்து பிரதமர் அந்த பணத்தை ஒரு நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்துள்ளார்.
பிரதமர் மோடியின் மொத்த சொத்து மதிப்பில் பெரும் பகுதி வைப்பு நிதியாக உள்ளது, மேலும் இந்த வைப்பு நிதி நீண்ட காலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. குஜராத் மாநிலத்தின் காந்திநகர் எஸ்பிஐ வங்கி கிளையில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் சுமார் 2.47 கோடி ரூபாய் வைத்திருப்பதாக அறிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டில், மோடியின் வைப்பு நிதியின் மதிப்பு சுமார் 37 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. மோடி 2021-22 ஆம் நிதியாண்டு அறிவிப்பில் காட்டிய 1.89 லட்சம் மதிப்புள்ள காப்பீட்டுக் கொள்கை அவரது FY22-23 சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிவிப்பில் இல்லை. இதன் பின்பு புதிய ஆயுள் காப்பீட்டு திட்டத்தை மோடி பெறவில்லை.
பிரதமர் மோடி தேசிய சேமிப்புச் சான்றிதழ் வாயிலாக 9.19 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார், கடந்த ஒரு ஆண்டில் 14,500 ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும் மோடியிடம் கடன்களோ, வாகனங்களோ, நிலச் சொத்துகளோ இல்லை.
2020ஆம் ஆண்டு வரையில், பிரதமர் மோடியிடம் 20,000 ரூபாய் மதிப்புள்ள உள்கட்டமைப்பு பத்திரங்கள் இருந்தன. பெரும்பாலான அரசியல் தலைவர்களைப் போலவே, பிரதமருக்கும் பங்குச் சந்தையில் எந்த விதமான முதலீட்டையும் செய்யவில்லை.
பிரதமர் மோடி எந்த சம்பளமும் வாங்காமல், தான் பெறும் முழுத் தொகையையும் நன்கொடையாக வழங்குகிறார். அவர் ஒரே ஒரு வங்கிக் கணக்கை மட்டுமே பராமரிக்கிறார், அதுவும் காந்திநகரில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் இருப்பது.
நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக ஆனதில் இருந்து இந்த எஸ்பிஐ வங்கி கணக்கை பயன்படுத்தி வருகிறார், மேலும் பிரதமரின் வங்கி இருப்பு வெறும் 574 ரூபாய் மட்டுமே, இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அவரிடம் ரொக்கமாக 30,240 ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications