பிரதமர் மோடி அதிரடி பேச்சு.. கொரோனா யுத்ததினை நமக்கான பாதையாக மாற்ற வேண்டும்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தை நாம் நமக்கான வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் என இந்திய வர்த்தக சபையின் 95வது ஆண்டு தின விழாவில் பிரதமர் நரேந்திரமோடி காணொலியில் பேசியுள்ளார்.

மேலும் சுயசார்பு இந்தியாவுக்கான திருப்புமுனையாக கொரோனா போராட்டத்தை மாற்றுவோம் எனவும் பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார்.

வளர்ச்சி பெறும்

வளர்ச்சி பெறும்

இந்திய தொழில் துறையானது மீண்டும் வளர்ச்சி பெறும். வளர்ச்சியைத் திரும்பப் பெறுவது அவ்வளவு கடினம் அல்ல. தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவுக்கான பாதை தொழில்துறைக்கு முன்பாக உள்ளது. ஆக நாம் இன்னும் பலமடைந்து உலகில் முன்னேறுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்தினை வலுப்படுத்த வேண்டும்

பொருளாதாரத்தினை வலுப்படுத்த வேண்டும்

கொரோனா வைரஸ் தொற்று நோயின் பாதிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டும். அதேநேரம் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த வேண்டும். மேட் இன் இந்தியா பொருட்களை உலகம் முழுவதும் பிரபலமாக்க வேண்டும் என்பதே எனது ஆசை. இந்த சமயத்தில் கொரோனா வைரஸ் நமது வளர்ச்சியினை சற்று குறைந்திருக்கலாம், ஆனால் தற்போது லாக்டவுனில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சி பாதை தொடங்கி விட்டது

வளர்ச்சி பாதை தொடங்கி விட்டது

இன்னும் சொல்லப்போனால் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான பாதை தொடங்கி விட்டது. இந்தியா உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது. இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நெருக்கடியான நேரத்தினை தங்களது வாய்ப்பாக மாற்ற முடிவு செய்துள்ளனர். ஆக இந்திய வளர்ச்சிக்கு இது ஒரு திருப்பு முனையாக மாற வேண்டும். இது ஒரு தன்னம்பிக்கை இந்தியா.

மேடு இன் இந்தியா பொருட்களை ஊக்குவிக்க வேண்டும்

மேடு இன் இந்தியா பொருட்களை ஊக்குவிக்க வேண்டும்

சமீபத்திய சீர்திருத்தங்களால் இந்தியா விவசாயிகளுக்கு அவர்களின் உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது. அவர்கள் நாட்டின் எந்தபகுதிக்கும் சென்று தங்களது பொருட்களை விற்கலாம். இதே தொழில்துறைகள் ஏற்றுமதியாளர்கள் ஆவது பற்றி சிந்திக்கும். மேலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேடு இன் இந்தியா பொருட்களை உலகத்திற்காக நாம் தயாரிக்க வேண்டும்.

விநியோக சங்கிலியை பலப்படுத்த வேண்டும்

விநியோக சங்கிலியை பலப்படுத்த வேண்டும்

உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும். அதற்கு உதவும் வகையில் ஒரு வலுவான உள்ளூர் விநியோகச் சங்கிலியை முதலில் உருவாக்குமாறு உற்பத்தியாளர்களை கேட்டுக்கொண்டார். இது ஏற்றுமதிக்கு வழிவகுக்கும்.
மேலும் இந்தியாவுக்கு தற்போது கொரோனா மட்டும் அல்ல, பல சவால்களையும் எதிர்கொண்டு வருகிறோம். ஆனால் நம்பிக்கையுடன் அவை அனைத்தையும் எதிர்த்து போராடி வருகிறோம் என்றும் கூறியிருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM narendra modi to address 95th annual plenary session of the ICC

Prime minister narendra modi to address 95th annual plenary session of the Indian chamber of commerce.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X