நம் நாட்டில் வைர தொழிலுக்கு புகழ் பெற்ற நகரம் குஜராத்தின் சூரத். வைரத் தொழிலுக்கு பெயர் பெற்றது என்றாலும் அங்கு இதுவரை வைரத்துக்கான பெரிய வர்த்தக மையம் கிடையாது.
மாறாக, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பாந்த்ரா-குர்லா வளாகத்தில் உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையமான பாரத் டைமண்ட் போர்ஸ் உள்ளது. இந்த வளாகத்தில் 2 லட்சம் சதுர அடியில் மொத்தம் 2,500 அலுவலகங்கள் உள்ளன. நாட்டின் முன்னணி வைர வர்த்தகர்கள் இந்த வர்த்தக மையத்தில் அலுவலகங்களை கொண்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், நாட்டின் முன்னணி வைர மையமாக மும்பைக்கு பதிலாக சூரத்தை மாற்றும் நோக்கில், உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக சூரத் டைமண்ட் போர்ஸ் என்ற பிரமாண்டமான வைர வர்த்தக மையம் அங்கு கட்டப்பட்டு வந்தது.
65,000க்கும் மேற்பட்ட கட்டிங், பாலிஷ் செய்பவர்கள், வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிபுணர்கள் உள்ளிட்ட இத்துறையை சேர்ந்தவர்களுக்கு வசதியான மையமாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த கட்டிடத்தின் நோக்கம்.
அமெரிக்க ராணுவ தலைமையமாக பென்டகனை காட்டிலும் இந்த வைர வர்த்தக் மையம் பெரிது என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், உலகின மிகப்பெரிய அலுவலக கட்டிடாக கின்னஸ் வேர்ல்டு ரிகார்ட்ஸால் அங்கீகரிக்கப்பட்டது.
சூரத் டைமண்ட் போர்ஸ் தற்போது திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகமான சூரத் டைமண்ட் போர்ஸ் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி 17ம் தேதி திறந்து வைக்கிறார். திறப்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் நாடு மற்றும் உலகம் முழுவதுமாக 70,000 பேருக்கு திறப்புவிழா அழைப்பிதழ்களை விழா ஏற்பாட்டாளர்கள் அனுப்பியுள்ளனர்.
2015ல் இந்த வைர வர்த்தக மையம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளில் சுமார் ரூ.3,500 கோடி செலவில் 35.54 ஏக்கர் நிலத்தில் 15 தளங்களுடன் 9 டவர்கள் கொண்ட கட்டிடமாக வர்த்தக மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மெகா கட்டிடத்தில் 300 சதுர அடி முதல் 1 லட்சம் சதுர அடி வரையிலான அலுவலக இடங்கள் உள்ளன.
இந்த வர்த்தக மையம் சுமார் 4,500 வைர வர்த்தக அலுவலகங்களை கொண்டிருக்கும் திறன் கொண்டது. இந்த கட்டிடம் இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் பிளாட்டினம் தரவரிசையில் உள்ளது.
அலுவலகங்களை தவிர்த்து டைமண்ட் போர்ஸ் வளாகத்தில் பாதுகாப்பு வைப்பு அறைகள், கருத்தரங்கு அறைகள், பன்நோக்கு அறைகள், உணவகங்கள், வங்கிகள், சுங்க அனுமதி நிறுவனம், கன்வென்ஷன் மையம், கண்காட்சி மையங்கள், பயிற்சி மையங்கள், பொழுதுபோக்கு பகுதிகள் மற்றும் பாதுகாப்புடன் கூடிய கிளப்புகள் உள்ளன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications