PM-SURAJ திட்டம் சாமானிய மக்களுக்கு எவ்வாறு பலனளிக்கும்?

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமையன்று பிஎம்-சுராஜ் (பிரதம மந்திரி சமாஜிக் உத்தான் மற்றும் அதாரித் ஜன்கல்யாண்) தேசிய போர்ட்டலை தொடங்கி வைத்தார். பொருளாதாரத்தில் அடிமட்ட மக்களை மேம்படுத்துவதற்கான மிக முக்கியமான நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

அகர்தலாவில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா கலந்து கொண்டார். இந்த போர்ட்டலைத் தொடங்கியதன் மூலம் சமூகத்தில் பின்தங்கிய வகுப்பினரை உயர்த்துவதற்கு அரசின் உறுதியை வெளிக்காட்டுகிறது.

PM-SURAJ திட்டம் சாமானிய மக்களுக்கு எவ்வாறு பலனளிக்கும்?

பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் தொழில்முனைவோருக்கு கடன் உதவியை வழங்குவதற்கான நாடு தழுவிய முயற்சியின் மையமாக இந்த தளம் உள்ளது. பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கை, நீண்ட காலமாக நிதியுதவி பெறாதவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடன் உரையாடிய பிரதமர் மோடி, தாழ்த்தப்பட்டோருக்கு முன்னுரிமை அளிப்பதில் தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

பிஎம்- சுராஜ் நேஷனல் போர்ட்டல், வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் உதவியுடன், நாடு முழுவதும் உள்ள தகுதியான நபர்களுக்கு கடன் உதவியை வழங்கும்.

இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு சுற்றுச்சூழலுக்கான தேசிய நடவடிக்கையின் (நமஸ்தே) கீழ் சஃபாய் மித்ராஸ் (சாக்கடை மற்றும் செப்டிக் டேங்க் தொழிலாளர்கள்) ஆகியோருக்கு ஆயுஷ்மான் ஹெல்த் கார்டுகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கருவிகள் விநியோகிக்கப்பட்டது.

500 மாவட்டங்களில் உள்ள பல்வேறு அரசுத் திட்டங்களில் இருந்து 3 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகள் கலந்து கொண்டது இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

பிஎம்- சுராஜ் தேசிய இணையதளத்தின் துவக்கமானது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக நிற்கிறது. விளிம்புநிலை சமூகங்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதியளிக்கிறது. வளர்ச்சிக்கான அரசின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பிஎம்- சுராஜ் திட்டத்தின் மூலம் நேரடியாக பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்குதல், இடைத்தரகர்கள் மற்றும் கமிஷன்களை நீக்குதல் ஆகியவை சாத்தியமாகும். 2047க்குள் விக்ஷித் பாரத் என்ற மேம்பாட்டை அடைவதற்கு இந்த தேசிய போர்ட்டல் உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

Story Written by: I.Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+