சூரிய மின் உற்பத்தி, ஆற்றல் உற்பத்தி மற்றும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற விவசாயம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் 2024-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகின. இந்தியாவை ஒரு நிலையான பொருளாதாரமாக மாற்றும் பாதையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மத்திய பட்ஜெட் 2024-இல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டத்தின் மூலம் ஒரு கோடி குடும்பங்களுக்கு சோலார் மின்சாரம் வழங்கும் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தினார்.
சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தின் காரணமாக அடிக்கடி மின்கட்டணங்கள் உயர்கிறது. ஏனெனில், பலர் வசதியாக இருக்க ஏர் கண்டிஷனர் மற்றும் குளிரூட்டும் ஏர்கூலர்களைப் பயன்படுத்துவதால், இந்த விலை ஏற்றம் ஏற்படுகிறது. இந்த பருவ கால சவால்களை சமாளிக்கும் பொருட்டு மத்திய அரசு கொண்டு வந்த பொன்னான திட்டம் தான், இந்த பிரதம மந்திரியின் சூரிய ஒளி மின்சாரத் திட்டம். இதன் மூலம் வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரக் கட்டணத்தை சேமிக்க முடியும்.

இந்த இலவச சூரிய ஒளி மின்சாரத் திட்டம், சுமார் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. தங்களது வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக் கொள்பவர்கள், இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதுபோல் சோலார் பேனல்களை வீட்டின் மேல் கூரையில் பொருத்திக் கொள்வதன் மூலம் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் 300 யூனிட் மின்சாரம் வரை இலவசமாகப் பெற முடியும்.
இந்தத் திட்டத்திற்கு ஏற்கனவே 1.28 கோடி பதிவுகள் மற்றும் 14 லட்சம் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதில் உள்ள 1 கோடிக்கும் அதிகமான வீடுகளில் கூரை மீது சோலார் பேனல்களை நிறுவவும், மாதத்திற்கு அதிகபட்சம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கவும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உபயோகிக்கும் போது ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ. 15,000 முதல் ரூ. 18000 வரை மின்சார கட்டணத்தை சேமிக்க முடியும். அதேபோல உங்களிடம் EV வாகனங்கள் இருந்தால், அவற்றிற்கு சார்ஜ் செய்யவும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அது மட்டும் இன்றி சோலார் பேனல்களை விநியோகிக்கும் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?: இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க https://pmsuryaghar.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லலாம். அதன்பின் "அப்ளை ஃபார் ரூஃப் டாப்" என்ற மெனுவை கிளிக் செய்யவும். இப்பொழுது நீங்கள் உங்களது மாநிலம், மாவட்டம், மின்சாரத் விநியோக நிறுவனத்தின் பெயர் மற்றும் நுகர்வோர் எண் ஆகியவற்றை என்டர் செய்து ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு அனைத்து தேவையான விவரங்களையும் கொடுத்து முடித்த பிறகு, நீங்கள் உங்களுக்கான ஒப்புதலைப் பெறுவீர்கள்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications