இந்தியாவில் நிலையான வளர்ச்சி மற்றும் மக்களின் நல்வாழ்வுக்காக, பிஎம் சூர்யா கர்: முஃப்த் பிஜிலி யோஜனா என்னும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார்.
இத்திட்டம் குறித்துப் பிரதமர் டிவிட்டரில் செய்த பதிவில், 75,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டில், மாதம்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதன் மூலம், ஒரு கோடி வீடுகளுக்குச் சோலார் மின்சாரத்தைக் கொண்டு வர இத்திட்டம் வழிவகுக்கும் எனத் தெரிவித்தார் நரேந்திர மோடி.

மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும் கணிசமான மானியங்கள் முதல் அதிகச் சலுகைகள் உடன் கடன்கள் வரை சோலார் மின்சாரக் களங்களை வீடுகளில் அமைப்பதில் மக்களுக்குக் கூடுதலான செலவுகள் இல்லாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் எனக் கூறினார்.
இந்தப் பிஎம் சூர்யா கர்: முஃப்த் பிஜிலி யோஜனா திட்டத்தில் தொடர்புள்ள அனைத்து பிரிவினரும் ஆன்லைன் போர்ட்டலில் ஒருங்கிணைக்கப்படுவார்கள். இது நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களையும் இணைக்க வசதியாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.
இந்தத் திட்டத்தை அடிமட்ட அளவில் பிரபலப்படுத்த வேண்டும் என்ற முக்கிய இலக்கை கொண்டு உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துகளில் இருந்து வீட்டின் மேல் சோலார் பேனல் (rooftop solar systems) அமைப்புகள் ஊக்குவிக்கப்படும் என்றார்.
அதே நேரத்தில், இந்தத் திட்டம் மூலம் அதிக வருமானம், குறைந்த மின் கட்டணங்கள் மற்றும் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகுக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். PMsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பதன் மூலம் பிரதமர் - சூர்யா கர்: முஃப்த் பிஜிலி யோஜனாவை வலுப்படுத்துமாறு அனைத்து மக்களுக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
புதிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக இடைக்காலப் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கவனிக்கத்தக்கது பிரதமர் சூர்யோதய யோஜனா.
வீட்டின் மாடியில் சோலார் பேனல்கள் அமைத்து சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்தும் 1 கோடி வீடுகளுக்கு மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
மக்கள் வீடுகளில் சோலார் பேனல்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது இதன் மூலம் ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை மின்சாரக் கட்டணம் சேமிக்க முடியும்.
இந்தத் திட்டம் தான் தற்போது PM Surya Ghar: Muft Bijli Yojana என்ற பெயரில் மோடி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications